Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 மிகப்பெரும் குழப்பங்கள்.. முடிவெடுக்க முடியாமல் திணறும் ரோகித் சர்மா.. இந்திய ப்ளேயிங் 11 என்ன?

துபாய்: இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Asia Cup 2022 இந்திய அணியில் Kuldeep Sen வருகை! மாற்றம் நடக்குமா? *Cricket

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை இரவு 7 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் ப்ளேயிங் 11 தான் ரசிகர்களிடையே தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங்கில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் யாரோ ஒருவருக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்படும் என்பதால், யார் நீக்கப்படுவார் என ரசிகர்களுக்கு குழப்பம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, பவுலிங் படை மிக குழப்பமாக உள்ளது.

ஸ்பின்னர்கள் படை

ஸ்பின்னர்கள் படை

துபாய் சர்வதேச மைதான பிட்ச்-ல் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே ஒவ்வொரு அணியும் 2 அல்லது 3 ஸ்பின்னர்கள் வரை இங்கு பயன்படுத்துவார்கள். அந்த வகையில் இந்திய அணிக்கு ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி பிஷ்னாய், யுவேந்திர சாஹல் என 4 பேர் உள்ளனர்.

பந்துவீச்சில் குழப்பம்

பந்துவீச்சில் குழப்பம்

ஒருவேளை பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்குமே வாய்ப்பு கொடுக்கப்பட்டால் 7 பேட்ஸ்மேன்கள் போக, மீதம் 4 இடம் தான் இருக்கும். இதில் 2 ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு, 2 வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். இதில் யுவேந்திர சாஹலின் பெயர் உறுதியாகியுள்ளது. இதே போல ஜடேஜா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. எனவே அஸ்வின் அல்லது ரவி பிஷ்னாய் இடையே தான் போட்டி நிலவுகிறது.

 வாய்ப்பு யாருக்கு

வாய்ப்பு யாருக்கு

கடந்தாண்டு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அந்த களம் குறித்து அவருக்கு நல்ல அனுபவம் இருப்பதால், அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அஸ்வின் மற்றும் ரவி பிஷ்னாய் என இருவருமே இன்றி தீபக் ஹூடாவை கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர். இதனால் பந்துவீச்சில் ரோகித் என்ன செய்யப்போகிறார் என்பது குழப்பமாக உள்ளது.

Story first published: Saturday, August 27, 2022, 15:35 [IST]
Other articles published on Aug 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+