Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.. ரோஹித் சர்மா நடந்து கொண்ட விதம்.. கோபம் அடையும் ரசிகர்கள்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மூத்த வீரர் ரோஹித் சர்மா பீல்டிங் செய்ய முடியாமல் கடுமையாக திணறி வருகிறார்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இங்கிலாந்து ஓப்பனிங் வீரர்கள் பர்ன்ஸ், சிப்லி நிதானமாக ஆடி வருகிறார்கள்.

இங்கிலாந்து அணியின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள். இங்கிலாந்து ஒப்பனர்கள் பர்ன்ஸ், சிப்லி இரண்டு பேருமே சிறப்பாக் பேட்டிங் செய்து வருகிறார்கள்.

மோசம்

மோசம்

சென்னை பிட்ச் இந்திய அணியின் பவுலிங்கிற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. முதல் நாள் ஆட்டம் என்பதால் பிட்ச் பேட்டிங் செய்ய வசதியாக உள்ளது. இதனால் பிட்ச் கொஞ்சம் கூட ஸ்விங் ஆகாமல் பேட்டிங் செய்ய வசதியாக இருக்கிறது.

பேட்டிங்

பேட்டிங்

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மூத்த வீரர் ரோஹித் சர்மா பீல்டிங் செய்ய முடியாமல் கடுமையாக திணறி வருகிறார். இந்திய வீரர் ரோஹித் சர்மா கடந்த சில மாதங்களாக அதிக உடல் எடை காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார். முக்கியமாக தொப்பை போட்டு திணறி வருகிறார்.

திணறல்

திணறல்

இவர் உடல் எடை அதிகம் இருப்பதாக பிசிசிஐ அதிகாரிகளே புகார் வைத்து இருந்தனர். இடையில் இந்திய அணியில் தேர்வாக வேண்டும் என்பதற்காக ரோஹித் சர்மா அதிகமாக உடற்பயிற்சி செய்தார். இதனால் இவர் கொஞ்சம் உடல் எடையை ரோஹித் சர்மா குறைத்தார்.

 உடல் எடை

உடல் எடை

இந்த நிலையில் தற்போது அதிக உடல் எடையால் ரோஹித் சர்மா பீல்டிங் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார். ஸ்லிப் நிற்கும் ரோஹித் சர்மா பந்தை விழுந்து பிடிக்க முடியாமல் திணறுகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் வேகமாக பந்தை துரத்த முடியாமல் கஷ்டப்பட்டார்.

பரிதாபம்

பரிதாபம்

பந்தை துரத்த முடியாமல் ரோஹித் சர்மா கஷ்டப்பட்டு ஓடியதை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. ரோஹித் சர்மா விரைவில் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லையென்றால் டெஸ்ட் போன்ற கிரிக்கெட் பார்மெட்டுகளில் அவர் ஆடுவது கடினமாகும்.

Story first published: Friday, February 5, 2021, 17:32 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+