Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘டெஸ்ட் அணிக்கும் புதிய கேப்டன்’ சீனியர் வீரர் மீண்டும் ஏமாற்றம்.. பிசிசிஐ எடுத்த அவசர முடிவு!

அமீரகம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக புதிய கேப்டனுடன் இந்திய அணி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி, தற்போது நியூசிலாந்து தொடருக்காக தயாராகி வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடனேயே இந்த தொடர் நடைபெறவிருப்பதால் அணித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

 நியூசிலாந்துடனான தொடர்

நியூசிலாந்துடனான தொடர்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. டி20 போட்டிகள் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ அறிவிப்பு

டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு இதில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கோலியும் பதவியில் இருந்து விலகியுள்ளதால், புதிய கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் கலக்கி வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி

இந்திய டெஸ்ட் அணி

இந்நிலையில் தற்போது, நவம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் பணியை பிசிசிஐ தேர்வுக்குழு மும்முரப்படுத்தியுள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளதால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

 புதிய கேப்டன்

புதிய கேப்டன்

இதனையடுத்து டி20 தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோஹித் ஷர்மாவே டெஸ்ட் தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணைக்கேப்டனாக அஜிங்கியா ரகானேவை தேர்ந்தெடுக்கவுள்ளதும் தெரியவந்துள்ளது. ஒருவேளை ரோகித் சர்மா ஓய்வெடுக்க விரும்பினால் ரகானே கேப்டனாக செயல்படுவார்.

மீண்டும் சாஹா

மீண்டும் சாஹா

இதே போல இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்-க்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மீண்டும் விருதிமான் சாஹா களமிறக்கப்படவுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சாஹாவிற்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதால் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள அவர் ஆர்வமாக உள்ளார்.

Story first published: Friday, November 12, 2021, 9:42 [IST]
Other articles published on Nov 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+