Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றி இருக்கட்டும் இதை கவனிச்சீங்களா? இந்திய அணி தவறவிட்ட 3 முக்கிய விஷயங்கள்.. இன்று சரியாகுமா?

சிட்னி: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 3 முக்கிய விஷயங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று தனது 2வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து போட்டி

நெதர்லாந்து போட்டி

பாகிஸ்தான் அணியுடனான முதல் லீக் போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது. அதுவும் விராட் கோலியின் அட்டகாசமான இன்னிங்ஸ், அந்த போட்டியை ஒரு வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்றியிருந்தது. இதனையடுத்து அதே வேகம் மற்றும் புத்துணர்ச்சியுடன் இந்திய அணி வீரர்கள் இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.

3 முக்கிய விஷயங்கள்

3 முக்கிய விஷயங்கள்

இந்நிலையில் கத்துக்குட்டி அணியுடனான போட்டியிலும் கூட இந்திய அணி 3 முக்கிய விஷயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதில் முதல் விஷயம் ரன்ரேட். கடந்தாண்டு ரன்ரேட் குறைபாட்டால் தான் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. அந்தவகையில் இந்தாண்டு பாகிஸ்தானுடன் கடைசி பந்தில் தான் வெற்றி கண்டதால் இந்தியாவின் ரன்ரேட் 0.050 என உள்ளது. எனவே இந்த போட்டியின் மூலம் முடிந்தவரை ரன்ரேட்டை அதிகரித்துக்கொள்ள வேண்டும். தற்போது வரை குரூப் பி பிரிவில் வங்கதேச அணி 0.450 ரன்ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது.

ரோகித்திற்கு சிக்கல்

ரோகித்திற்கு சிக்கல்

இந்தியா கருத்தில் கொள்ள வேண்டிய 3வது விஷயம் மன உறுதி. பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டர் மிக மோசமாக திணறியது. குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் பந்தை எதிர்கொள்வதற்கே தடுமாறி விக்கெட்டை பறிகொடுத்தனர். எனவே நெதர்லாந்து போட்டியை பயன்படுத்தி அவர்கள் இருவரும் இதனை சரிசெய்ய வேண்டியுள்ளது. அப்போது தான் தென்னாப்பிரிக்காவை சமாளிக்க முடியுமி.

3வது பிரச்சினை

3வது பிரச்சினை

ரோகித் படையின் மிக முக்கிய தேவை, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும். மழைப்பொழிவால் அயர்லாந்திடம் இங்கிலாந்தே தோல்வியடைந்தது. இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்தியா உஷாராக இருக்க வேண்டும். ஒருவேளை இந்தியா தோற்றுவிட்டால், அடுத்ததாக வங்கதேசம், தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிகளை எதிர்கொள்ள வேண்டும். அதில் ஒரு தோல்வி பெற்றாலும் பின்னர் அரையிறுதி வாய்ப்பு பறிபோகும்.

Story first published: Thursday, October 27, 2022, 10:00 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+