Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க தப்புதான்.. கோலி தந்த பயங்கர அழுத்தம்.. பயத்தை அறுவடை செய்த ரோஹித்.. பரபர செஞ்சுரி பின்னணி!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி சதம் அடித்துள்ளார் .

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அதிரடியாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் தொடக்கத்தில் திணறிய அணி தற்போது அதிரடி காட்ட தொடங்கி உள்ளது.

புஜாரா, சுப்மான் கில், கோலி ஆகியோர் மோசமாக ஆடி ஏமாற்றம் அளித்தனர். அதிலும் கோலி, கில் டக் அவுட் ஆகி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

எப்படி

எப்படி

ஆனால் ரோஹித் சர்மா மட்டும் யார் அவுட் ஆனால் என்ன, எனக்கு கவலையே இல்லை என்று மிகவும் உறுதியாக களத்தில் நின்று அதிரடியாக ஆடினார். அதிலும் இவர் மொயின் அலி, லீச் போன்ற ஸ்பின் பவுலர்களை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டார். ஸ்பின் பவுலர்களை இவர் முறையான ஸ்வீப் ஷாட்கள் மூலம் எதிர்கொண்டார்.

ஸ்விங்

ஸ்விங்

பந்து எவ்வளவு ஸ்விங் ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் உறுதியாக நின்று ரோஹித் சர்மா அடித்தார். ஒரு சீனியர் வீரராக மிகவும் பொறுப்பாக ரோஹித் சர்மா ஆடினார். ரோஹித் சர்மா சென்ற போட்டியில் ரூட் ஆடியது போல ஸ்வீப் ஷாட் அதிகம் அடித்து ஆதிக்கம் செலுத்தினார்.

பந்து

பந்து

பந்து அதிகமாக பவுன்ஸ் மற்றும் ஸ்விங் ஆனதை எதிர்கொள்ள முடியாமல் கோலி, கில் போன்றவர்கள் அவுட் ஆனார்கள். இந்த பந்துகளை எதிர்கொள்ள பயந்தனர். ஆனால் இதே பயத்தை ரோஹித் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பந்துகளை ஸ்வீப் ஷாட் மூலம் அடித்து வெளுத்தார்.

அழுத்தம்

அழுத்தம்

அதேபோல் கடந்த போட்டியில் ரோஹித் சர்மா சரியாக ஆடவில்லை என்று கோலி மறைமுகமாக அழுத்தம் கொடுத்து இருந்தார். ஓப்பனிங் வீரர் சரியில்லை என்று ரோஹித் மீது கோலி புகார் வைத்தார்.இந்த நிலையில் இந்த அழுத்தத்தை ரோஹித் சர்மா நேர்த்தியாக கையாண்டு செஞ்சுரி அடித்துள்ளார்.

 செஞ்சுரி

செஞ்சுரி

செஞ்சுரி அடித்ததோடு தற்போது நிலையாக பேட்டிங் செய்து வருகிறார்கள். 130+ ரன்களை கடந்தும் ரோஹித் நிலையாக ஆடி வருகிறார்.ரோஹித் ஆடிய விதத்தை பார்த்து ரஹானேவும் தற்போது அவரை பின்பற்றி ஆடி வருகிறார்.

Story first published: Saturday, February 13, 2021, 23:16 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+