Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது வெறும் ஆரம்பம் தான்.. டி20யில் வரலாற்று சாதனை படைத்த “ஹிட்மேன்” ரோஹித்! நீளும் சாதனை லிஸ்ட்!!

Recommended Video

Rohit Sharma T20 record | டி20யில் வரலாற்று சாதனை படைத்த ரோஹித்!- வீடியோ

ஆக்லாந்து : ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார் ரோஹித் சர்மா. இந்த போட்டியில் 35 ரன்களை கடந்த போது இந்த சாதனையை செய்தார் ரோஹித் சர்மா.

போட்டிக்கு முன்

போட்டிக்கு முன்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20க்கு முன் ரோஹித் சர்மா அதிக டி20 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார். ரோஹித் 35 ரன்களை கடந்தால் முதலிடத்தை பிடிக்கலாம் என்ற நிலை இருந்தது.

முதலிடம் பிடித்து உலக சாதனை

முதலிடம் பிடித்து உலக சாதனை

முதல் போட்டியில் சரியாக ரன் குவிக்காத ரோஹித் சர்மா, இரண்டாம் போட்டியில் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். இதன் மூலம், டி20 போட்டிகளில் 2288 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

அடுத்த இடங்களில்..

அடுத்த இடங்களில்..

ரோஹித் சர்மாவிற்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் மார்டின் குப்டில் 2272 ரன்களுடன் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் அணியின் ஷோயப் மாலிக் 2263 ரன்களுடன் இருக்கிறார். நான்காம் இடத்தில் கோலி 2167 ரன்களுடன் இருக்கிறார்.

நீடித்து நிலைக்குமா?

நீடித்து நிலைக்குமா?

இவர்கள் நால்வரும் தற்போது டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆடி வரும் நிலையில், ரோஹித்தின் இந்த முதல் இடம் நீடித்து நிலைக்குமா? என்பது சந்தேகமே. தொடர்ந்து ரோஹித் ரன் குவிக்கும் பட்சத்தில் முதல் இடத்தை தக்க வைக்க வாய்ப்புள்ளது.

சிக்ஸர் சாதனை

சிக்ஸர் சாதனை

இந்த சாதனையோடு ரோஹித் சர்மா மற்றொரு மைல்கல்லையும் இந்த போட்டியில் எட்டினார். டி20 போட்டிகளில் தன் நூறாவது சிக்ஸரை அடித்தார் ரோஹித். இதுவரை ரோஹித் 102 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்னும் இரண்டு சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

அதிக சதம், அரைசதம்

அதிக சதம், அரைசதம்

இது தவிர ரோஹித் டி20 போட்டிகளில் அதிக சதம், அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். அவர் டி20 போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் அடித்துள்ளார்.

Story first published: Friday, February 8, 2019, 15:05 [IST]
Other articles published on Feb 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+