Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பதுங்கி பாய்ந்த ரோகித் ஷர்மா.. வெறும் 36 பந்துகளில் 100 டூ 200 ரன்.. இந்திய அணி உலக சாதனை

மொகாலி: இலங்கைக்கு எதிரான இன்றைய மொகாலி ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மாவின் அதிரடி இரட்டை சதத்தால் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. ரோகித் ஷர்மாவின் சாதனைகள் மட்டுமின்றி, அணியும் ஒட்டுமொத்தமாக சாதனை படைத்துள்ளது.

இந்திய அணி ஒரு போட்டியில் 300க்கும் மேல் ரன் குவிப்பது இது 100வது முறையாகும். இந்த சாதனையை படைக்கும் முதல் அணி இந்தியா.

இந்திய பேட்டிங் வலிமை

இந்திய பேட்டிங் வலிமை

சச்சின், கங்குலி, சேவாக், கோஹ்லி, ரோகித் ஷர்மா போன்ற இந்திய அணியின் தொடர் பேட்டிங் சாதனையாளர்களால் இந்த சாதனை சாத்தியப்பட்டுள்ளது. பிற அணிகளில் இப்படி தொடர்ந்து ரன் குவிக்க கூடிய பேட்ஸ்மேன்கள் உருவாகாததும், நமது நாட்டு பிட்சுகள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதும் இதற்கான காரணங்களாக இருக்கலாம்.

36 பந்துகள்தான்

36 பந்துகள்தான்

ரோகித் ஷர்மா 100 ரன்களை 115 பந்துகளில் கடந்தார். ஆனால் அடுத்த 100 ரன்களை வெறும் 36 பந்துகளில் கடந்தார். அந்த காலகட்டத்தில் அவரது ஸ்டிரைக் ரேட் 277.78 ஆக இருந்தது. டி வில்லியர்ஸ், மார்டின் கப்தில் மற்றும் ரோகித் ஷர்மா ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஒரு நாள் போட்டியொன்றில் 10 சிக்சர்களுக்கும் மேல் விளாசியுள்ளார்கள். இன்று ரோகித் ஷர்மா 12 சிக்சர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஷ் சதம்

சபாஷ் சதம்

16வது ஒருநாள் செஞ்சுரியை எட்ட சச்சினுக்கு 185 இன்னிங்சுகள் தேவைப்பட்டன. கங்குலிக்கு 151 இன்னிங்சுகள் தேவைப்பட்டது. கோஹ்லி அதை 110 போட்டிகளிலேயே எட்டிவிட்டார். ரோகித்ஷர்மா 167வது போட்டியில் 16வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

தோல்வியே கிடையாது

தோல்வியே கிடையாது

2015 முதல் இந்திய அணி, உள்நாட்டு இரு தரப்பு தொடரில், எந்த வகை கிரிக்கெட் போட்டியிலும் தொடரை தோற்றது இல்லை. 13 தொடர்களில் வென்றுள்ளது. 1 டெஸ்ட் தொடர் டிரா ஆகியுள்ளது.

Story first published: Wednesday, December 13, 2017, 16:21 [IST]
Other articles published on Dec 13, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+