Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அதமட்டும் மாத்தவே முடியல..” இந்திய வீரர்கள் மீது ரோகித் சர்மா அதிருப்தி.. எதை கூறுகிறார் தெரியுமா??

இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போதும், இந்திய வீரர்கள் மீது ரோகித் சர்மா பெரும் குறையை கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று சவுத்தாம்டனில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 198-8 ரன்களை எடுத்தது. இதன்பின் ஆடிய இங்கிலாந்து 148 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற போதும், வீரர்கள் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதாவது இங்கிலாந்துக்கு எதிராக மிக மோசமாக ஃபீல்டிங் அமைந்தது. ஆட்டத்தின் 8வது ஓவரில் ஓவரில் பூருக்ஸின் முக்கிய கேட்சை தினேஷ் கார்த்திக் தவறவிட்டார்.

தவறவிட்ட கேட்ச்கள்

தவறவிட்ட கேட்ச்கள்

இதன்பின்னர் ஆட்டத்தின் 11வது ஓவரில் மொயின் அலியின் கேட்சை சூர்யகுமார் யாதவும், 14வது ஓவரில் ஜோர்டன் கேட்சை தினேஷ் கார்த்திக்கும் தவறவிட்டனர். இந்த சொதப்பல்கள் நீண்டுக்கொண்டே சென்றது. 15வது ஓவரில் ஜோர்டன் கேட்சை மீண்டும் சாஹல் மற்றும் அதே ஓவரில் மில்ஸ் கேட்சை தீபக் ஹூடாவும் தவறவிட்டார்கள்.

ரோகித் சர்மா பேச்சு

ரோகித் சர்மா பேச்சு

இந்நிலையில் இப்படி பல கேட்ச்-களை தவறவிட்டது குறித்து ரோகித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், "இந்த பிட்சில் இரவு நேரத்தில் நல்ல ஸ்விங் கிடைக்கும் என நினைத்தோம். இதனால்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துவிட்டு, மாலை நேரத்தில் பந்துவீசினோம். பவர் பிளேவில் பந்துவீசிய புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் இருவரும் சிறப்பாக ஸ்விங் செய்தார்கள்.

ஒரே ஒரு பிரச்சினை

ஒரே ஒரு பிரச்சினை

எங்கள் அணியில் இருந்த ஒரே பிரச்சினை ஃபீல்டிங் மட்டும் தான். பிடிக்க வேண்டிய முக்கிய கேட்ச்களை தவறவிட்டோம். அடுத்தடுத்த போட்டிகளில் இப்படி நடக்காது என நம்புகிறேன். இதனை சரி செய்வதற்காக ஆலோசனைகள் நடத்தப்படும் என ரோகித் சர்மா கூறினார்.

Recommended Video

Zimbabwe செல்ல உள்ள india அணி! IND vs ZIM *Cricket
பேட்டிங் சிறப்பு

பேட்டிங் சிறப்பு

தொடர்ந்து பேசிய அவர், பேட்டிங்கை பொறுத்தவரையில், பவர் பிளேவில் இருந்தே அடித்து ஆட முடிவு செய்தோம். அப்போது தான் ஆட்டத்தின் கடைசி வரை சிறப்பாக செயல்பட முடியும். சிலமுறை நினைத்ததுபோல் நடக்கும், நடக்காமலும் போகும். இன்று எங்களுக்கான நாளாக இருந்தது என ரோகித் சர்மா மகிழ்ச்சி அடைந்தார்.

Story first published: Friday, July 8, 2022, 12:33 [IST]
Other articles published on Jul 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+