For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பையில் ரோகித்துக்கு கண்டம்.. பாகிஸ்தானுக்கு எதிராக திணறிய ஹிட்மேன்.. ரெக்காட்ஸ் இதோ

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. இதில் அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது .

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் t20 உலக கோப்பை தொடருக்கு ஒரு பயிற்சி கலமாக பார்க்கப்படுவதால் இந்திய அணி வீரர்களுக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதில் ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் பாகிஸ்தான் ரூபத்தில் ஹிட்மனுக்கு ஒரு கண்டம் காத்திருக்கிறது.

ரோகித்தின் குறை

ரோகித்தின் குறை

கடந்த டி20 உலக கோப்பையில் கூட இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ரோகித் சர்மா,கேஎல் ராகுல் போன்றோர் செம பார்மில் இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்தியா முதல் சுற்றுலேயே நடையை கட்டியது. அதற்கு காரணம் ரோகித் சர்மா தொடக்கத்தில் சொதப்பியதுதான். ரோகித் சர்மாவுக்கு அண்மைக்காலமாக ஒரு குறை இருக்கிறது.

நெருக்கடி

நெருக்கடி

இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ரோகித் சர்மா திணறுகிறார் என்பதுதான். டி20 உலக கோப்பையில் கூட ரோகித் சர்மா, ஷாகின் அப்ரிடி மற்றும் டிரெண்ட் பவுல்ட் ஆகியோர் பந்து வீச்சில் ரோகித் சொற்பரன்களிலே ஆட்டம் இழந்தது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது முதல் போட்டியே பாகிஸ்தானுடன் என்பதால் இதில் ரோஹித் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முக்கிய பரீட்சை

முக்கிய பரீட்சை

தொடர்ந்து எட்டு தொடர்களை ரோகித் சர்மா வென்றாலும் அது அனைத்தும் ஒரு பொருட்டே இல்லை.ஆனால் ரோகித்துக்கு முக்கியமான பரிட்சையே ஆசிய கோப்பை தொடர் தான்.அது மட்டும் இல்லாமல் டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா இதுவரை ஒரு முறை கூட 30 ரன்களை தாண்டியதில்லை.

பாக் எதிராக ரோகித்

பாக் எதிராக ரோகித்

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 இன்னிங்ஸில் ரோகித் சர்மா அடித்த ஸ்கோர் 30, 2 ,4, 24, 0,10, 0 ஆகும். இதில் சராசரி வெறும் 14 தான். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி தன்னுடைய ரெக்கார்டை மேம்படுத்தும் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு உள்ளது. ரோகித் கே எல் ராகுலும் கொடுக்கும் தொடக்கத்தை நம்பியே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு உள்ளது.

Story first published: Saturday, August 13, 2022, 20:11 [IST]
Other articles published on Aug 13, 2022
English summary
Rohit sharma vs Pakistan - t20 records might he need to improveஆசிய கோப்பையில் ரோகித்துக்கு கண்டம்.. பாகிஸ்தானுக்கு எதிராக திணறிய ஹிட்மேன்.. ரெக்காட்ஸ் இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+