Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க எப்படி இப்படி சொல்லலாம்.. கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா.. ஹிட்மேனை கோபப்படுத்திய அந்த விஷயம்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதை கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் உடனே மீண்டும் வந்து இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வென்றுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித், அஸ்வின் அடித்த சதம், அஸ்வின் அக்சர் எடுத்த 5 விக்கெட்டுகள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.

வெற்றி

வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதை கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய அணியின் வெற்றிக்கு பிட்ச்தான் காரணம். சென்னை பிட்ச் ஸ்பின் பிட்சாக மாற்றப்பட்டு இருந்தது.

விமர்சனம்

விமர்சனம்

இதை பயன்படுத்தி இங்கிலாந்து அணியை இந்தியா வென்றுவிட்டது. மற்றபடி இந்திய அணியின் வெற்றிக்கு வேறு காரணம் இல்லை என்று இங்கிலாந்து தொடங்கி பல அணிகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதான் சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

இந்த நிலையில் சென்னை பிட்ச் காரணமாக ரோஹித் சர்மா கடும் கோபத்திற்கு உள்ளாகி உள்ளார். கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா.. எங்களின் வெற்றிக்கு பிட்ச் காரணம் இல்லை. பிட்சை காரணம் காட்டி எங்களை அணியின் வெற்றியை குறைத்து மதிப்பிட கூடாது.

பதிலடி

பதிலடி

நாங்கள் வெளிநாட்டிற்கு சென்றால் அங்கு இருக்கும் ஸ்பீட் பவுலிங் குறித்து புகார் வைக்க மாட்டோம். அப்படி இருக்கும் போது சென்னையின் ஸ்பின் பிட்ச் குறித்து நீங்களும் புகார் வைக்க கூடாது. நாங்கள் வெளிநாட்டு பிட்சில் ஆடுவது போல நீங்களும் இந்த பிட்சில் ஆட வேண்டும் என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டு இருக்கிறார்.

கோபம்

கோபம்

பிட்சை வைத்து இந்திய அணியின் வெற்றியை குறைத்து மதிப்பிடுவதை ரோஹித் சர்மா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தான் அவர் மிகவும் கோபமாக கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்சும் இதேபோல் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Monday, February 22, 2021, 12:06 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+