Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீ என்று புரிகிறதா.. மீண்டும் விஸ்வரூபம் எடுத்த ரோஹித்.. டி-20யில் அதிவேக சதம்!

இந்தூர்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டியில் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து இருக்கிறார். இதன் மூலம் டி-20ல் டேவிட் மில்லரின் அதிவேக சதம் அடித்த சாதனையை ரோஹித் சமன் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி இன்று மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள 'ஹோல்கர்' மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் இறங்கிய இந்தியா மிகவும் அதிரடியாக ஆடுகிறது.

Rohith Sharma hits fastest century in T20 match

இந்த நிலையில் கேப்டன் ரோஹித் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். 43 பந்துகள் பிடித்த இவர் 10 சிக்ஸ்களும், 12 பவுண்டரிகளும் அடித்து 118 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய இவர் சமீரா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இவர் தனது 100 ரன்னை வெறும் 35 பந்தில் அடித்தார். இதன் மூலம் டி-20ல் அதிவேக சதமான டேவிட் மில்லரின் சதம் சாதனையை சமன் செய்து இருக்கிறார்.

இது டி-20 போட்டியில் ரோஹித் சர்மாவின் இரண்டாவது சதம் ஆகும். அதேபோல் இந்திய கேப்டன் ஒருவர் டி-20 போட்டியில் அடிக்கும் முதல் சதம் ஆகும்.

Story first published: Friday, December 22, 2017, 20:37 [IST]
Other articles published on Dec 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+