Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கல்யாண நாளில் டபுள் செஞ்சுரி அடித்த கேப்டன்.. மைதானத்திலேயே கண்ணீர்விட்ட ரோஹித் மனைவி!

மொஹாலி: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 208 ரன்கள் அடித்தார்.

இந்த இரட்டை சதத்தின் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனைகள் படைத்து இருக்கிறார். அவருக்கு இணையம் முழுக்க வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

மேலும் இன்று அவருக்கு திருமண நாள் என்பதால் அதற்கும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையிடம் இந்தியா பட்ட அவமானத்திற்கு இதன் மூலம் பதில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஒரே வீரர்

ரோஹித் சர்மா இதற்கு முன்பே இரட்டை சதம் அடித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 209 ரன்கள் அடித்துள்ளார். இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் அதிகபட்சமாக அடித்துள்ளார். ஐசிசி ஒருநாள் தொடரில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் இவர் மட்டும்தான்.

மனைவி கண்ணீர்

இன்று ரோஹித் சர்மாவின் திருமண நாள் ஆகும். இந்த போட்டியை காண்பதற்காக ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே வந்திருந்தார். ரோஹித் ஒவ்வொரு ரன்களாக அடிக்கும் போதும் அதிக பதட்டம் அடைந்தது இவர்தான். ரோஹித் 190 ரன்களுக்கு மேல் இருந்த போது ரசிகர்களை விட இவர்தான் அதிக பதட்டமாக இருந்தார். ரோஹித் இரட்டை சதம் அடித்ததை பார்த்து இவர் கண்ணீர் விட்டார். ரோஹித் களத்தில் இருந்து இவரை நோக்கி பேட்டை தூக்கி காட்டினார்.

வெறும் 35 பந்தில் சதம்

ரோஹித் முதல் 100 ரன்களை அடிக்க மட்டுமே அதிக பந்துகளை எடுத்துக் கொண்டார். ஆனால் கடைசி 100 ரன்களுக்கு வெறும் 35 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டார். இவரது இந்த சாதனையை இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டி இருக்கிறார்.

அதிக சிக்ஸர்கள்

இந்த போட்டியில் ரோஹித் இரட்டை சதம் அடித்ததை போலவே அதிக சிக்ஸும் அடித்தார். மொத்தமாக 12 சிக்ஸ்கள் அடித்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2013ல் 16 சிக்ஸர்கள் அடித்தார். தற்போது 12 சிக்ஸருடன் இவரே இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதேபோல் கேப்டனாக இதுவரை 200 கடந்த ரன்கள் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே.

Story first published: Wednesday, December 13, 2017, 16:06 [IST]
Other articles published on Dec 13, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+