டோணி விளையாடியதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.. ரோஹித் சர்மா அதிரடி பேட்டி
தர்மசாலா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடந்தது. இந்த போட்டியில் இலங்கையிடம் இந்திய தோல்வியடைந்தது.
தற்போது இந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் டோணியின் ஆட்டம் குறித்தும் வித்தியாசமான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய கேப்டன்ஷிப் குறித்தும் அவர் அந்த பேட்டியில் சில முக்கியமான விஷயங்களை கூறியுள்ளார். கோஹ்லி இல்லாமல் விளையாடுவது கடினமாக இருக்கிறது என்றும் வருத்தப்பட்டார்.

தோல்வி
நேற்று இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 20.4 ஓவரில் இந்தியாவின் 113 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்தது. மேலும் இலங்கை அணி தொடரிலும் 1-0 என்று கணக்கில் முன்னிலை வைக்கிறது. தற்போது இந்த தோல்வி குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

போட்டியை மறக்க மாட்டேன்
அவர் தனது கேப்டன்ஷிப் குறித்து கூறினார். அதில் ''கோஹ்லி இல்லாமல் அணியின் கேப்டனாக செயலாற்றி இருக்கிறேன். இது மிகவும் மோசமான அனுபவம். இதை மறக்கவே மாட்டேன். இந்த போட்டி என் கண்களை திறந்துள்ளது. எப்போது எல்லாரும் வெற்றி அடையும் பக்கம் இருக்கவே விரும்புவார்கள். எனவே எனக்கு இது மோசமான அனுபவத்தை கொடுத்துள்ளது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கோஹ்லி இல்லாமல் போய்விட்டார்
மேலும் இவர் கோஹ்லி குறித்தும் பேசியுள்ளார். அதில் ''கோஹ்லி இல்லாதது அணிக்கு பெரிய பலவீனம். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் அவர் இல்லாமல் முழுமையடையாது. அவர் இல்லாததால் இந்திய அணி நேற்று அதிகம் திணறிவிட்டது. நேற்று இன்னும் 50 ரன்கள் அடித்து இருந்தால் கூட வெற்றி பெற்று இருப்போம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

டோணி குறித்து ரோஹித்
இந்த நிலையில் அவர் டோணியின் பேட்டிங் குறித்து பேசும் போது ''டோணி விளையாடியது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. அவர் மிகவும் இக்கட்டான நிலையில் இப்படித்தான் பொறுப்பாக ஆடுவார். பல முறை இந்திய அணியை அவர் காப்பாற்றி இருக்கிறார். அதே வேலையைத்தான் அவர் நேற்றும் செய்தார். அவரோடு விளையாடுவது நல்ல அனுபவம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications