Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Awesome.. ஆஸி. மண்ணில் 112 வருடங்களுக்கு பிறகு நியூசி. பேட்ஸ்மேன் சாதனை!

பெர்த்: ஆஸ்திரேலிய மண்ணில் 112 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதை நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் நடத்திக்காண்பித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் ஆடிவருகிறது. 2வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரிலுள்ள வகா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு, 559 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், 2வதாக நியூசிலாந்து பேட் செய்தது.

ரன் குவித்த நியூசிலாந்து

ரன் குவித்த நியூசிலாந்து

நியூசிலாந்து, அணியின், ரோஸ் டெய்லர் எடுத்த 290 ரன்கள் உதவியோடு, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 624 ரன்களை குவித்து ஆல்-அவுட் ஆனது.

டெய்லர் சாதனை

டெய்லர் சாதனை

ரோஸ் டெய்லர் அடித்த 290 என்பது ஆஸ்திரேலிய மண்ணில், நடந்த டெஸ்ட் போட்டியில் வெளிநாட்டு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன் என்ற சாதனைக்கு உரித்தாகியுள்ளது. முன்னதாக, 1903ம் ஆண்டு, சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து வீரர் போஸ்டர் 287 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்.

ஒட்டுமொத்த சாதனை

ஒட்டுமொத்த சாதனை

1938ல், இங்கிலாந்தின் லென் ஹுட்டன்ஸ், இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குவித்த 364 ரன்கள் என்பது, ஆஸி.க்கு எதிராக எடுக்கப்பட்ட தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

ஆஸ்திரேலிய மண்ணில், போஸ்டர் நிகழ்த்திய சாதனை தற்போது டெய்லரால் 112 வருடங்களுக்கு பிறகு தகர்க்கப்பட்டுள்ளது. எனவேதான் டெய்லர் அவுட் ஆகி வெளியேறியபோது, ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தது.

லட்சுமணன்

லட்சுமணன்

லென் ஹுட்சன்ஸ், டெய்லர், போஸ்டர் ஆகியோருக்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர் இந்தியாவின், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகும். அவர் 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 281 ரன்கள் விளாசினார்.

அடுத்தடுத்த சாதனைகள்

அடுத்தடுத்த சாதனைகள்

ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து குவித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற பெருமையை, முதல் இன்னிங்சில் அந்த அணி எடுத்த ரன்கள் பெற்றுள்ளன. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் பிட்சில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது கூடுதல் பெருமை. இதே டெஸ்ட் போட்டியில்தான், ஆஸி.பவுலர் ஸ்டார்க், டெஸ்ட் போட்டிகளிலேயே அதிகபட்ச வேகத்தில் பந்து வீசிய சாதனையை நேற்று நிகழ்ச்சியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 16, 2015, 14:30 [IST]
Other articles published on Nov 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+