எல்லாத்துலயும் நூறு... சொல்லி அடித்த நியூசிலாந்து வீரர்
Recommended Video
வெல்லிங்டன்: சர்வதேச அளவில் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் 100 போட்டிகளை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை நியூசிலாந்தின்ராஸ் டெய்லர் தட்டி சென்றுள்ளார்.
இந்தியா -நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வெல்லிங்டனில் இந்திய நேரப்படி அதிகாலை 4 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்மூலம் டெஸ்ட் வடிவத்தில் தன்னுடைய 100வது போட்டியை ராஸ் டெய்லர் அடைந்துள்ளார்.
கடந்த இந்தியா -நியூசிலாந்து சர்வதேச டி20 தொடரில் தன்னுடைய 100வது டி20 போட்டியை அவர் கடந்து சாதனை புரிந்தார். தன்னுடைய அணிக்காக ராஸ் டெய்லர் 231 சர்வதேச ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெல்லிங்டனில் துவக்கம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெல்லிங்டனில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்களுக்கு ரன்களை எடுத்துள்ளது.

ராஸ் டெய்லரின் சாதனை
இந்த போட்டியில் பங்கேற்றுள்ள நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் 100 போட்டிகளை கடந்து சாதனை புரிந்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டி அவர் பங்கேற்கும் 100வது போட்டியாகும். இதன்மூலம் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 100 போட்டிகளை கடந்த முதல் சர்வதேச வீரர் என்ற பெருமை ராஸ் டெய்லருக்கு கிடைத்துள்ளது.

ராஸ் டெய்லரின் 100வது போட்டி
தன்னுடைய 100வது சர்வதேச டி20 என்ற சாதனையை கடந்த இந்தியா -நியூசிலாந்து சர்வதேச டி20 தொடரில்தான் அவர் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நியூசிலாந்து அணிக்காக 231 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதையடுத்து சர்வதேச டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் தற்போது டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் 100 போட்டிகளை விளையாடிய முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் அடைந்துள்ளார்.

மைதானத்தில் ராஸ் டெய்லர் குதூகலம்
தன்னுடைய இந்த சாதனையை அடுத்து, தன்னுடைய குழந்தைகளுடன் இந்தியா -நியூசிலாந்து டெஸ்ட் போட்டி நடைபெறும் வெல்லிங்டனின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் அவர் வெற்றிநடை போட்டார். தன்னுடைய குழந்தைகளுடன் நடைபோட்ட அவரது முகத்தில் சாதனையின் மகிழ்ச்சி தெரிந்தது.

ராஸ் டெய்லரின் சாதனை
இதனிடையே நியூசிலாந்து அணிக்காக ஆடிவரும் ராஸ் டெய்லர், அந்த அணிக்காக தான் விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையையும் பெற்றவர். இந்த இரு வடிவங்களிலும் இவர் இதுவரை 40 சதங்களை அடித்துள்ளார். இந்நிலையில் ராஸ் டெய்லரின் இந்த சாதனைக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications