For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னையிடம் மரண அடி வாங்கிய ஆர்சிபி.. 70 ரன்களில் ஆல்அவுட்.. கடுப்பான கோலி

சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை அணியுடன் மோதிய பெங்களூரு 70 ரன்களில் ஆல் அவுட்டாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கடுப்பேற்றி இருக்கிறது.

இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலியின் பெங்களூரு அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதற்கு தோனி சொன்ன காரணம்.... பிட்ச் நிலவரத்தை கணிக்கமுடியவில்லை என்பதாகும்.

சாதனை இல்லை

சாதனை இல்லை

பின்னர் முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்லவேண்டும். 5 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைப்பார் ரசிகர்கள் ஒரு பக்கம் காத்திருக்க ஓபனிங் இறங்கிய கோலி அடித்தது வெறும் 6 ரன்கள்.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

ஹர்பஜன் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து பொறுப்பில்லாமல் சென்று ரசிகர்களை கடுப்பேற்றினார். மறுபக்கம் பார்த்தீவ் படேல் நிதானமாக களத்தில் நின்றார்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அடுத்து வந்த மொயின் அலி, டிவில்லியர்ஸ் இருவரையும் 9 ரன்களில் சாய்த்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தார் ஹர்பஜன் சிங். ஹெட்மெயர், டுபே, கிராண்டஹோம், சாய்னி என அனைவரும் அடித்தது எல்லாம் ஒற்றை இலக்க ரன்கள் தான்.

70 ரன்களில் ஆல் அவுட்

70 ரன்களில் ஆல் அவுட்

மொத்தத்தில் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளாமல் சரண் அடைந்தது பெங்களூரு அணி. 17.1 ஓவரிலே 70 ரன்களில் ஆல் அவுட்டாகி ரசிகர்களின் அனைத்து அதிருப்திகளையும் சம்பாதித்து கொண்டது.

ஒற்றை இலக்கம்

ஒற்றை இலக்கம்

அந்த அணியில் பார்தீவ் படேலை தவிர மற்ற அனைவரும் எடுத்ததோ வெறும் சிங்கிள் டிஜிட் ஸ்கோர் தான். ஆக... பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த பெங்களூரு ரசிகர்களை ஒரேடியாக தமது பந்துவீச்சில் சென்னை அணி சாய்த்துவிட்டது.

Story first published: Saturday, March 23, 2019, 21:50 [IST]
Other articles published on Mar 23, 2019
English summary
Royal challengers Bangalore bowled out by 70 runs by chennai super kings in opening match in ipl.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+