For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

RR vs RCB:கேப்டன் கோலியாக இது 100வது போட்டி... பார்த்தீவ் படேலுடன் நிதான தொடக்கம்

ஜெய்பூர்:ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் கேப்டன் கோலி, பார்த்தீவ் படேல் ஆகியோர் நிதான பேட்டிங்கை தொடங்கினர்.

நடப்பு சீசனில் இதுவரை வெற்றியே பெறாத அணிகள் என்று பார்த்தால் இந்த அணிகள் தான். ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, மோதிய 3 ஆட்டங்களிலும் கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்தன.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பந்து வீச்சின் போது இறுதி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை வாரி கொடுத்தது. அந்த ஆட்டத்தில் அஸ்வின் செய்த மன்கட் ரன் அவுட்டும் ராஜஸ்தான் அணிக்கு பேரிடியாக இருந்தது.

தோல்வி

தோல்வி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ராஜஸ்தான் அணி.

முக்கிய வீரர்கள் அவுட்

முக்கிய வீரர்கள் அவுட்

சென்னை அணியின் 3 முக்கிய விக்கெட்களை 27 ரன்களுக்குள் சாய்த்தது. ஆனாலும் தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசி ஆட்டத்தை ராஜஸ்தான் அணியிடம் இருந்து பறித்தார்.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் வெற்றிக்காக காத்திருக்கிறது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி இரு ஆட்டங்களில் மோசமான தோல்வியை சந்தித்தது. இவ்விரு அணிகளும் தமது முதல் வெற்றியை பெற இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடும்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது. இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணியில் இருந்து பிரயாஸ் ராய் பர்மான், சிவம் துபே ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நவ்தீப் சைனி மற்றும் அக்ஷதீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டோனிஸ் இடம்பெற்றார்

ஸ்டோனிஸ் இடம்பெற்றார்

டி கிராண்ட்ஹோம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோனிஸ் இன்றைய போட்டியின் மூலம் பெங்களூர் அணியில் கால் பதித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னியும், ஜெயதேவ் உனாட்கட்டிற்கு பதிலாக வருண் ஆரோனும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

இதையடுத்து.. பெங்களூர் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும், இடது கை ஆட்டக்காரர் பார்த்தீவ் படேலும் களம் இறங்கினர். இந்த போட்டியானது, ஐபிஎல் தொடரில் கேப்டனாக பதவியேற்ற கோலியின் 100வது போட்டியாகும்.

நிதான தொடக்கம்

நிதான தொடக்கம்

இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். முதல் ஓவரில் 4வது பந்தில் பவுண்டரி அடித்து கேப்டன் கோலி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார். இந்த போட்டி வென்றாக வேண்டிய ஒன்று என்பதால் இருவரும் நிதான ஆட்டத்தை தொடக்கி உள்ளனர்.

Story first published: Tuesday, April 2, 2019, 20:49 [IST]
Other articles published on Apr 2, 2019
English summary
Royal challengers bangalore captain virat kohli and parthiv patel opened their innings against rahathan royals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+