RR vs RCB:100வது போட்டியில் கோலி க்ளீன்போல்டு.. டிவில்லியர்ஸ், ஹெட்மையர் அவுட்.. திணறும் பெங்களூர்
ஜெய்பூர்: ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் கேப்டன் கோலி, கோபால் பந்தில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார்.
நடப்பு சீசனில் இதுவரை வெற்றியே பெறாத அணிகள் என்று பார்த்தால் இந்த அணிகள் தான். ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, மோதிய 3 ஆட்டங்களிலும் கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்தன. அதே போல கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் 3 ஆட்டங்களிலும் தோற்று போயின.
எனவே இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கிய போட்டியாகும். ஜெய்பூரில் தொடங்கிய இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றது. இதையடுத்து, கோலி தலைமையிலான அணி முதலில் களம் கண்டது.

துவக்க ஜோடி
தொடக்க வீரர்களாக கேப்டன் கோலியும், பார்த்தீவ் படேலும் களம் கண்டனர். கோலி ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள 100வது போட்டியாகும். எனவே... ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

துவக்க ஜோடி
தொடக்க வீரர்களாக கேப்டன் கோலியும், பார்த்தீவ் படேலும் களம் கண்டனர். கோலி ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள 100வது போட்டியாகும். எனவே... ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

முதல் ஓவரில் 10 ரன்கள்
அதன்படி, இருவரும் களம் இறங்கினர். தொடக்க வீரரான கோலி முதல் ஓவரை நிதானமாக எதிர்கொண்டார். முதல் ஓவரில் 10 ரன்கள் கிடைத்தன.

இருவரும் பவுண்டரி
2வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து கிடைக்கின்ற பந்துகளை எதிர்கொண்ட இருவரும் பவுண்டரிகளையும் அடிக்க தவறவில்லை.

கோலி அவுட்
ஒருவழியாக அருமையான தொடக்கம் கிடைத்தது என்று நினைத்த நேரத்தில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. ஆட்டத்தில் ஓரளவு செட்டிலான கோலி, 7வது ஓவரில் கோபால் பந்தில் போல்டாகி அதிர்ச்சி அளித்தார்.

9வது ஓவரில் கேட்ச்
அவரை தொடர்ந்து டி வில்லியர்ஸ் களம் கண்டார். அணியின் ரன்விகிதம் மேலும் உயரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அவரும் 9வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இந்த விக்கெட்டையும் எடுத்தவர் கோலியை காலி செய்த அதே கோபால் தான்.

அடுத்தடுத்து அவுட்
10 ஓவர்களுக்குள் 2 முக்கிய மற்றும் நட்சத்திர விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாற்றத்துடன் இருந்தது. அதன்பிறகு வந்த ஹெட்மையரும் வெளியேறினார். இந்த போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications