Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப மூணாவது இடத்தில இருக்கோம்... அடுத்தது முதலிடம்தான்... ஆர்சிபி வைராக்கியம்

ஷார்ஜா :ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையிலான 28வது ஐபிஎல் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் மீண்டும் 3வது இடத்தை ஆர்சிபி பிடித்துள்ளது. ஆர்சிபி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் 7 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளை பெற்று கேகேஆர் அணி 4வது இடத்தில் உள்ளது.

ஆர்சிபி -கேகேஆர் மோதல்

ஆர்சிபி -கேகேஆர் மோதல்

ஷார்ஜாவில் ஐபிஎல்லின் 28வது போட்டி நேற்று மாலை ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளை அந்த அணி பெற்றுள்ளது.

டீ வில்லியர்ஸ் அபாரம்

டீ வில்லியர்ஸ் அபாரம்

கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் ஏபி டீ வில்லியர்சின் அபார ஆட்டத்தின் மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.

3வது இடத்தில் ஆர்சிபி

3வது இடத்தில் ஆர்சிபி

இதையடுத்து ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் 3வது இடத்திற்கு ஆர்சிபி தாவியுள்ளது. இந்நிலையில் 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலிருந்து கேகேஆர் அணி 4வது இடத்தில் உள்ளது.

மயங்க் அகர்வால் 2வது இடம்

மயங்க் அகர்வால் 2வது இடம்

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தொடர்ந்து 387 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரது அணியை சேர்ந்த மயங்க் அகர்வால் 337 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 17 விக்கெட்டுகளுடன் டெல்லி கேபிடல்சின் காகிசோ ரபடா பௌலர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

சஹல் 5வது இடம்

சஹல் 5வது இடம்

ஆர்சிபியின் யுஸ்வேந்திர சஹல் 7 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளுடன் அந்த அணியின் முதலிடத்தில் உள்ளார். இதேபோல ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் டிரெண்ட் போல்ட் 11 விக்கெட்டுகளை பெற்றுள்ளனர். ஆயினும் புள்ளிகள் அடிப்படையில் பும்ரா 2வது இடத்தில் உள்ளார்.

Story first published: Wednesday, October 14, 2020, 13:57 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+