Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி -சிஎஸ்கே மோதல்... ஹாட்-ட்ரிக் வெற்றியை அடைஞ்சே தீருவோம்.. ஆர்சிபி பிடிவாதம்

துபாய் : சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையிலான ஐபிஎல்லின் 44வது லீக் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களில் உள்ள ஆர்சிபி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ள சிஎஸ்கேவுடன் மோதவுள்ளது.

அடுத்தடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுடன் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ள நிலையில், சிஎஸ்கேவுடனான இந்த போட்டியில் ஹாட் ட்ரிக் வெற்றியை பெற அந்த அணி காத்திருக்கிறது.

சிஎஸ்கே -ஆர்சிபி மோதல்

சிஎஸ்கே -ஆர்சிபி மோதல்

ஐபிஎல்லின் 44வது லீக் போட்டியில் சிஎஸ்கேவுடன் ஆர்சிபி அணி இன்னும் சிறிது நேரத்தில் மோதவுள்ளது. இதே அணிகள் கடந்த சில போட்டிகளுக்கு முன்பு மோதிய நிலையில் ஆர்சிபி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அவுட் ஆகாமல் விராட் கோலி அடித்த 90 ரன்கள் அணியை எளிதாக வெற்றி பெற உதவியது.

கேகேஆர் அணியுடன் சாதனை

கேகேஆர் அணியுடன் சாதனை

இந்நிலையில் இந்த இரு அணிகளும் தற்போது மோதவுள்ளன. அடுத்தடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுடன் மோதி ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் கேகேஆர் அணிக்கு 84 ரன்கள் மட்டுமே கொடுத்து வரலாற்று சாதனை படைத்தது.

பௌலிங்கில் கலக்கும் ஆர்சிபி

பௌலிங்கில் கலக்கும் ஆர்சிபி

இந்நிலையில், சிஎஸ்கேவுடனான இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் ஹாட் ட்ரிக் வெற்றியை சுவைக்க விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி காத்திருக்கிறது. எப்போதுமே ஆர்சிபி பேட்டிங்கில் சிறப்பாக இருக்கும். இந்த சீசனில் பௌலிங்கிலும் கலக்கி வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கேவை அந்த அணி எளிதாக வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 போட்டிகளில் மட்டுமே வெற்றி

3 போட்டிகளில் மட்டுமே வெற்றி

இந்நிலையில், அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயுள்ளது சிஎஸ்கே. இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ள சிஎஸ்கே கேப்டன் தோனி, கடந்த போட்டியின் தோல்வியின் போது, அடுத்துவரும் 3 போட்டிகளில் வெல்வோம் என்று உறுதியுடன் தெரிவித்துள்ள நிலையில், இந்த போட்டி கவனம் பெறுகிறது.

Story first published: Sunday, October 25, 2020, 15:00 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+