Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி கேபிடல்சோட விளையாடி வின் பண்றது கஷ்டம்.. விராட் கோலி

துபாய்: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி இடையிலான நேற்றைய போட்டியில் ஆர்சிபியை 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி கொண்டுள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 43 ரன்களை அடித்துள்ளார்.

இதனிடையே, வீரர்கள் முக்கிய தருணங்களில் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

197 ரன்கள் இலக்கு

197 ரன்கள் இலக்கு

ஐபிஎல்லின் 19வது போட்டி நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் உள்ளிட்டவர்கள் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மேலும் பௌலிங்கிலும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு முக்கிய விக்கெட்டுகளை முன்னதாகவே வீழ்த்தினர். இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வெற்றி கொண்டது.

பார்ட்னர்ஷிப் அவசியம்

பார்ட்னர்ஷிப் அவசியம்

இந்நிலையில், இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய விராட் கோலி, முக்கியமான தருணங்களில் புரபஷனலாக செயல்படுவது வீரர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று தெரிவித்துள்ளார். மேலும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை எடுப்பதும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோற்கடிப்பது கடினம்

தோற்கடிப்பது கடினம்

தொடர்ந்து பேசிய விராட் கோலி, டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் பயமின்றி சிறப்பாக விளையாடியதாகவும் அவர்களிடம் சிறப்பான ஸ்பின்னர்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர்களை தோற்கடிக்க முடியாது என்று தான் கூறமாட்டேன் என்றும் ஆனால் தோற்கடிப்பது கடினம் என்றும் விராட் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, October 6, 2020, 10:53 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+