Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023.. இம்முறையாவது பெங்களூரு அணிக்கு கோப்பை கிடைக்குமா? பிளேயிங் லெவன் என்ன.. ஒரு பார்வை!

பெங்களூரு: ஐபிஎல் தொடர் இன்னும் இரு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

15 ஆண்டுகளுக்கு ஆர்சிபி அணி ரசிகர்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஐபிஎல் கோப்பை. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஒருமுறை கூட பெங்களூரு அணி கோப்பையை வென்றதில்லை.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஒரே அணி பெங்களூரு மட்டும் தான். அதுமட்டுமல்லாமல் ஏலத்தில் கணிசமான வீரர்களை தன்னிடத்தில் வைத்துக் கொண்டதும் அந்த அணிக்கு சாதகமாக உள்ளது.

ஆர்சிபி அணி

ஆர்சிபி அணி

வழக்கம் போல் ஆர்சிபி அணிக்கு டூ ப்ளஸிஸ் - விராட் கோலி தான் தொடக்க வீரர்களாக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. என்னதான் ஃபின் ஆலன் அணியில் இருந்தாலும், மேக்ஸ்வெல், ஹசரங்கா மற்றும் டாப்லீ ஆகியோரின் தேவை அதிகமாக இருப்பதால், ஃபின் ஆலனை பயன்படுத்த முடியாத நிலையில் ஆர்சிபி உள்ளது. இதனால் டூ ப்ளஸிஸ் - கோலி கூட்டணியே தொடக்கம் கொடுக்கும்.

தாக்குதல் திட்டம்

தாக்குதல் திட்டம்

கடந்த ஆண்டு போல் அல்லாமல் விராட் கோலி வெறித்தன ஃபார்மில் இருப்பதுதான் அந்த அணியின் முக்கியமான நம்பிக்கை. கடந்த முறை விராட் கோலியின் பங்கு இல்லாமலேயே ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இம்முறை விராட் கோலியும் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால், ராக்கி பாய் போல் எதிரணிகளை தாக்குவது மட்டுமே திட்டமாக இருக்கும்.

அசத்தலான மிடில் ஆர்டர்

அசத்தலான மிடில் ஆர்டர்

அதேபோல் மூன்றாவது இடத்தில் படிதர் மாயமடைந்தாலும், அந்த இடத்தில் லோம்ரோர் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. பின்னர் அனுஜ் ராவத், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஹசரங்கா ஆகியோர் மிடில் ஆர்டரில் பெரிய சிக்சர்களை அடிக்கக் கூடிய வீரர்களாக உள்ளனர். இதில் மேக்ஸ்வெல் காயமடைந்தாலும், அவரது இடத்தில் களமிறங்க பிரேஸ்வெல்லை தயாராக வைத்துள்ளது ஆர்சிபி அணி.

சிராஜின் ஃபார்ம்

சிராஜின் ஃபார்ம்

அதேபோல் சிராஜின் அபாரமான ஃபார்ம், ஹர்சல் படேலின் ஸ்லோ பால் திட்டம், ஷாபாஸ் அஹ்மத்தின் சுழல் ஆகியவை எந்த மைதானத்தில் எதிரணியை அச்சுறுத்த கூடியவையே. அதேபோல் அவினாஷ் சிங் என்ற ஒரு வீரரை ஆர்சிபி தேடி கொண்டுள்ளது. அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது.

இன்பேக் பிளேயர் யார்?

இன்பேக் பிளேயர் யார்?

இருப்பினும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை மற்றும் ஹர்சல் படேலின் ஃபார்ம் மட்டுமே ஆர்சிபி-யின் பின்னடைவாக உள்ளது. ஏனென்றால் பிளேயிங் லெவனை கடந்து பெஞ்சில் உள்ள வீரர்களில் அனைவருமே அனுபவமில்லாத வீரர்களாக இருக்கிறார்கள். ஹெல்சவுட்டும் காயத்தால் விலகி இருப்பதால், யாராவது ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டாலும், ஆர்சிபி-க்கு பிரச்சனை தான்.

கர்நாடக தேர்தலால் சாதகம்

கர்நாடக தேர்தலால் சாதகம்

ஆனால் கர்நாடகா தேர்தல் நெருங்குவதால், சொந்த மண்ணில் ஆடும் போட்டிகளைல் ஆர்சிபி அணி தொடக்கத்திலேயே விளையாட உள்ளது. இதனால் சொந்த மண்ணில் ஆர்சிபி அணியால் வெற்றிபெற முடிந்தால், வெளியூர் மைதானங்களிலும் அந்த நம்பிக்கையால் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றாலும், விராட் கோலி - டூ ப்ளஸிஸ் ஆட்டமே அந்த அணியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

Story first published: Wednesday, March 29, 2023, 16:59 [IST]
Other articles published on Mar 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+