RR vs RCB: ஆரம்பத்தில் நிதானம்.. கொஞ்சம் சொதப்பல்.. ஒரு வழியாக 158 ரன்களை எடுத்த பெங்களூர்
ஜெய்பூர்:ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர்கள் ஆட்டமிழந்தாலும் அசராத பார்த்தீவ் படேல், பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தார். 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து உள்ளது.
நடப்பு சீசனில் இதுவரை வெற்றியே பெறாத அணிகள் என்று பார்த்தால் இந்த அணிகள் தான். ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, மோதிய 3 ஆட்டங்களிலும் கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்தன. பெங்களூர் அணியும் அப்படித்தான்.
வெற்றி கணக்கை எப்படியும் தொடங்கியாக வேண்டும் என்ற உறுதியுடன் இரு அணிகளும் களம் இறங்கின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து, பெங்களூர் அணி முதலில் பேட் செய்தது.

கோலிக்கு 100
தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும், பார்த்தீவ் படேலும் களம் இறங்கினர். இந்த போட்டியானது, ஐபிஎல் தொடரில் கேப்டனாக பதவியேற்ற கோலியின் 100வது போட்டியாகும்.

நிதான தொடக்கம்
இந்த போட்டி வென்றாக வேண்டிய ஒன்று என்பதால் இருவரும் நிதான ஆட்டத்தை தொடக்கி உள்ளனர். நிதானமாக இருவரும் ரன்களை சேர்த்தனர். தவறான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினர்.

கோலி ஆட்டமிழப்பு
அவர்களின் நிதானம் அணிக்கு ஓரளவு நம்பிக்கையை தந்தது. ஆனால்... அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 ரன்கள் எடுத்திருந்த கோலி எதிர்பாராத விதமாக கோபால் பந்தில் கேட்சாகி வெளியேறினார்.

டிவில்லியர்ஸ் அவுட்
அவரை தொடர்ந்து டிவில்லியர்ஸ் களம் கண்டார். அணியின் முக்கிய வீரர் என்பதால் அவரை அவுட்டாக்க வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக இருந்தது. அதற்கு விரைவிலேயே பலன் கிடைத்தது.

ஒரு ரன்னில் அவுட்
9 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர் கோபால் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஹெட்மையரோ சுத்த மோசம். ஒரு ரன்னில் திருப்தியடைந்தவராக பெவிலிலியன் சென்றார்.

ரன்ரேட் அதிகரித்தது
நிதானமாக, அருமையான ஆட்டத்தை ஆடிய பெங்களூர் சொதப்பி தள்ளியது. அதன் பின்னர் ஸ்டோனிஸ், படேலுடன் கை கோர்த்தார். இந்த ஜோடி சற்று நிதானத்துடன் ஆடி.... அதே நேரத்தில் ரன் ரேட்டையும் உயர்த்தியது.

பார்த்தீவ் படேல் 67 ரன்கள்
பொறுப்புடன் ஆடிய பார்த்தீவ் படேல் அரைசதம் கடந்தார். இறுதி கட்ட ஓவர்களில் அடித்து ஆட வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், பார்த்தீவ் படேல் அடித்து ஆட முற்பட ஆர்ச்சர் பந்தில் வீழ்ந்தார். அவரின் 67ரன்கள் அணிக்கு பெருமளவு உதவியது.

159 ரன்கள் இலக்கு
அதன் பின்னர், ரன்ரேட் பெரிய அளவுக்கு உயரவில்லை. இறுதிக்கட்ட ஓவர்களில் ரன்கள் மெதுவாக வந்தன. அவ்வப்பொழுது பந்துகள் பவுண்டரி எல்லையை கடந்தன. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 158 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் மட்டும் அந்த அணி 19 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் 159 அணிக்கு ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications