For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

RCB vs KKR:அடின்னா.. அடி..! வெளுத்து வாங்கிய கோலி, டி வில்லியர்ஸ் படை.. 205 ரன்களை குவித்த பெங்களூர்

கொல்கத்தா: வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தை 205 ரன்களை குவித்திருக்கிறது.

ஐபிஎல் தொடரில் 17வது போட்டியாக பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

1
45773

பெங்களூரு அணி தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்து தொடரில் நீடிக்க வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இதையடுத்து, கோலி அண்ட் கோ களம் இறங்கியது.

ஆட்டம்

ஆட்டம்

தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் படேலும், கோலியும் களம் கண்டனர். இருவரும் சர்வ நிதானமாக தமது ஆட்டத்தை தொடர்ந்தனர். ஒரு முடிவு எடுத்தே இருவரும் ஆட்டத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்தது.

ரன்கள் சேர்ப்பு

ரன்கள் சேர்ப்பு

எடுத்தவாறு, இருவரும் கொல்கத்தா பந்துவீச்சை எதிர்கொண்டனர். முதல் ஓவரில் பெங்களூரு அணி 13 ரன்கள் எடுத்தது. அதற்கடுத்த ஓவர்களில் சீரான வேகத்தில் ரன்கள் வந்து விழுந்தன.

நல்ல பார்ட்னர்ஷிப்

நல்ல பார்ட்னர்ஷிப்

முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 31 பந்துகளில் 50 ரன்களை எடுத்து வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். 4வது ஓவரில் அந்த அணிக்கு 13 ரன்கள் கிடைத்தன.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

நிதானமாக இருவரும் ஆட்டத்தை தொடர்ந்த போதிலும், அணியின் ஸ்கோர் ரன்ரேட்டும் 9 என்ற அளவிலேயே இருந்தது. 8வது ஓவரில் ராணாவின் பந்தில் பார்த்தீவ் படேல் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 ரன்கள் குவித்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அதன்பிறகு கோலியுடன் கை கோர்த்தார் டி வில்லியர்ஸ். இந்த தொடரில் இந்த ஜோடி பெரிய அளவில் எடுபடாமல் போனதாக எழுந்த விமர்சனங்களுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர். மெதுவாக தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கோலி.

ரன்கள் சேர்ப்பு

ரன்கள் சேர்ப்பு

ஆனால்... மறுமுனையிலோ கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்து வாங்க ஆரம்பித்தார் டி வில்லியர்ஸ். ஒரு பக்கம் கோலி... மறுபக்கம் டி வில்லியர்ஸ் என ரன்கள் ஜெட் வேகத்தில் வந்து விழுந்தன.

108 ரன்கள் குவிப்பு

108 ரன்கள் குவிப்பு

என்ன செய்வது என்று தெரியாமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் மண்டை காய்ந்தனர். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 108 ரன்கள் குவித்தது. கோலிக்கு பின்னர் டி வில்லியர்ஸ் பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் அனுப்பி வைத்து கொண்டே இருந்தார்.

கோலி 84 ரன்கள்

கோலி 84 ரன்கள்

கோலியும் விடவில்லை. அவரது மட்டையில் இருந்து தெறித்து விழுந்த பந்துகள், நாலாபுறமும் சென்று பெங்களூர் அணிக்கு ரன்களாக வாரி குவித்தன. சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, 84 ரன்களில் குல்தீப் பந்தில் வெளியேறினார்.

206 ரன்கள் வெற்றி இலக்கு

206 ரன்கள் வெற்றி இலக்கு

அவர் சென்றவுடன் டி வில்லியர்சும் அடித்து ஆட முற்பட்டார். 19வது ஓவரில் அவரும் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டங்களில் பேட்டிங்கில் அனல் பறந்ததால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 205 ரன்களை குவித்தது.

Story first published: Friday, April 5, 2019, 22:23 [IST]
Other articles published on Apr 5, 2019
English summary
Royal challengers bangalore scored 205 runs against Kolkata knight riders.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+