188 ரன்களை நோக்கி அதிரடியாக ஆடிய பெங்களூரு... பார்த்தீவ், கோலி அடுத்தடுத்து அவுட்
டெல்லி:டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயித்த 188 ரன்கள் ஸ்கோரை நோக்கி பெங்களூரு அணி அதிரடியாக ஆடினாலும் பார்த்தீவ், கோலி விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
ஐபிஎல் தொடரில் முக்கிய ஆட்டத்தில் டெல்லி அணியும், பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட் செய்தது.
தொடக்கத்திலும், இறுதியிலும் அதிரடியாகவும் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை குவித்தது. அந்த அணியில் தவானும், ஸ்ரேயாஸ் அய்யரும் அருமையாக ஆடி அரைசதம் கடந்தனர்.

பவுண்டரிகள்
இதையடுத்து, 188 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பெங்களூரு களம் இறங்கியது. முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை அடித்து, அசத்தலாக ஆட்டத்தை தொடர்ந்தார் பார்த்தீவ் படேல்.

உயர்ந்த ரன்ரேட்
அதற்கு அடுத்து 2வது ஓவரில் ஒரு சிக்சர், 3வது ஓவரில் 3 பவுண்டரிகள் என டெல்லி அணி பந்துவீச்சை வெளுத்தார். ரன்ரேட் அதிரடியாக உயர தொடங்கியது.

39 ரன்களில் அவுட்
சராசரியாக ஒரு ஓவருக்கு 10 ரன்கள் வீதம் அணிக்கு வந்து கொண்டிருந்தது. ஸ்கோர் 63 ரன்களை எட்டிய போது பார்த்தீவ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கோலியும் காலி
அவரை தொடர்ந்து அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் களத்துக்கு வந்தார். கோலியும், வில்லியர்சும் நிச்சயம் மாயாஜாலம் செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் அக்சர் படேல் பந்தில் வீழ்ந்தார் கோலி.

எதிர்பார்ப்பு
ரன்கள் இருந்தாலும் முக்கிய விக்கெட்டுகளை பெங்களூரு அணி இழந்திருக்கிறது. எப்படி இருப்பினும், இந்த போட்டியில் வெற்றி முக்கியம் என்பதால் பெங்களூரு அணி ரசிகர்கள் பரபரப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications