Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRH vs RCB:சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி... டாஸ் வென்ற பெங்களூர் பந்துவீச்சு

Recommended Video

IPL 2019:Hyderabad vs Bengaluru | ஹைதராபாத் அபார பேட்டிங், பெங்களூருக்கு அடுத்த தோல்வி

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

ஹைதராபாதிலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இதுவரை பெங்களூரு அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது.

அந்த அணியில் கோலி, டிவில்லியர்ஸ் உள்ளிட் டோர் இருந்தும் அந்த அணியால் வெற்றி பெறமுடியவில்லை. பார்த்தீவ் பட்டேல், மொயீன் அலி, ஷிம்ரன் ஹெட்மயர், காலின் டி கிராண்ட்ஹோம் உள்ளிட்டோர் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

6 ரன்களில் தோல்வி

6 ரன்களில் தோல்வி

பெங்களூரு அணி, தனது 2-வது ஆட்டத்தில் மும்பையை எதிர்கொண்டது. அதில் மும்பை அணி திரில் வெற்றி கண்டது.முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.

முடிவில் சர்ச்சை

முடிவில் சர்ச்சை

அந்த போட்டியின் முடிவு, கிரிக்கெட் உலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஏன் என்றால், கடைசி ஓவரை மும்பை வீரர் மலிங்கா வீசினார். கடைசி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த பந்தில் பெங்களூரு வீரர்களால் ரன் எடுக்க முடிய வில்லை.

நோபாலால் அதிர்ச்சி

நோபாலால் அதிர்ச்சி

அதனால் மும்பை வெற்றி கண்டது. ஆனால் அந்த பந்து நோபால் என்பது பின்னர் தெரியவந்தது. அதை நடுவர் கவனிக்காததால் மும்பைக்கு வெற்றியும், பெங்களூருக்கு தோல்வியும் கிடைத்தது.

வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

அதற்கு மாற்றாக, இன்றைய ஆட் டத்தில் வெற்றி பெற பெங்களூரு அணி களம் இறங்குகிறது. ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி பெற்றுள்ளது.

அணி விவரம்

அணி விவரம்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விவரம்: டேவிட் வார்னர், ஜானி பியர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), விஜய் ஷங்கர், மனிஷ் பாண்டே, முகமது நபி, தீபக் ஹூடா, யூசுப் பதான், புவனேஸ்வர் குமார் (கேப்டன்), ரஷீத் கான், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), மோயீன் அலி, ஏபி டி வில்லியர்ஸ், சிம்ரோன் ஹெட்மியர், ஷிம்ம் டூப், கொலின் டி கிராண்ட்ஹோம், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரயஸ்ரே பர்மன், சஹால்

Story first published: Friday, April 17, 2020, 21:01 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+