IPL 2025: மலைக்க வைக்கும் ஐபிஎல் ரெக்கார்டு.. ஆர்சிபி அணி இந்த ஒரே ஆண்டில் செய்த சாதனை பட்டியல்
அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 2025 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று, 18 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, RCB தங்கள் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது. விராட் கோலி தலைமையிலான அணியின் இந்த வெற்றி, ரசிகர்களின் நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளது.

RCB-யின் வரலாற்றுச் சாதனைகள்
இந்த சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் படைத்துள்ளது. அவற்றின் ஒரு பார்வை:
- ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை வென்றது.
- ஆர்சிபி அணி 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச சேசிங்கை (228 ரன்கள்) பதிவு செய்தது.
- 9 ஆண்டுகளுக்குப் பிறகு புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் நிறைவு செய்தது.
- 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ வீழ்த்தியது.
- 10 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேயில் மும்பை இந்தியன்ஸ்-ஐ வென்றது.
- 7 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை தோற்கடித்தது.
- 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
- முதல்முறையாக சிஎஸ்கே-வுக்கு எதிராக இரு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
- லீக் சுற்றில் அனைத்து வெளி மைதான போட்டிகளையும் வென்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது.
- சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-வுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை (50 ரன்கள்) பதிவு செய்தது.
- ஐபிஎல் அணிகளிலேயே முதல்முறையாக, ஒரு ஐபிஎல் சீசனில் 10 வெவ்வேறு வீரர்கள் 50+ ரன்கள் அடித்தனர்.
- முதல்முறையாக, ஒரே சீசனில் 9 வெவ்வேறு RCB வீரர்கள் ஆட்ட நாயகன் (M.O.M) விருது வென்றனர்.
- ஐபிஎல் பிளே ஆஃப்-இல் எதிரணியை 15 ஓவர்களுக்குள் ஆல் அவுட் செய்த முதல் அணி ஆனது.
- பிளே ஆஃப்-இல் வேகமாக இலக்கை (10 ஓவர்களில்) துரத்தியது.
- முதல்முறையாக, ஒரு சீசனில் ஒரே எதிரணியை (பஞ்சாப் கிங்ஸ்) 3 முறை தோற்கடித்தது.
- முதல்முறையாக, ஐபிஎல் பிளே ஆஃப்-இல் டாப் 7 பேட்டர்களும் குறைந்தபட்சம் 15 ரன்கள் எடுத்தனர்.
இந்த சாதனைகள் அனைத்தும் ஆர்சிபி-யின் இந்த சீசன் வெற்றியின் சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன.
Story first published: Wednesday, June 4, 2025, 12:50 [IST]
Other articles published on Jun 4, 2025


Click it and Unblock the Notifications