Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs GT: ஐபிஎல் பைனலில் வெற்றி பெறப் போவது இந்த அணி தான்.. அம்பத்தி ராயுடு, பின்ச் கணிப்பு

அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த முக்கியமான போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து முன்னாள் வீரர்கள் ஆரோன் பின்ச், அம்பதி ராயுடு மற்றும் டாம் மூடி ஆகியோர் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த இரு அணிகளுமே லீக் சுற்றில் புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தின. இரு அணிகளுமே புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இருந்தன. மேலும், முதல் தகுதிச் சுற்றிலும் மோதின. அதில் பெங்களூரு அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

Royal Challengers Bengaluru or Gujarat Titans - Who will win IPL 2026 Final Aaron Finch Ambati Rayudu Predicts

இந்த நிலையில் ஆரோன் பின்ச், அம்பதி ராயுடு, டாம் மூடி ஆகியோர் இந்த இரண்டு அணிகளில் எந்த அணி 2026 ஐபிஎல் கோப்பையை வெல்லும் என கணித்து உள்ளனர்.

ஆரோன் பின்ச்: "இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு 50-50 என்றே கருதுகிறேன். குஜராத் அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய சாதகம். ஆனால், காகிதத்தில் பெங்களூரு அணி மிகவும் சமபலமுள்ள அணியாகத் தெரிகிறது. ரஜத் படிதார் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் பெங்களூரு அணியின் முதுகெலும்பாக உள்ளனர்."

அம்பதி ராயுடு: "ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தே வெற்றி அமையும். ஒருவேளை சிவப்பு மண் ஆடுகளம் (Red Soil) அமைக்கப்பட்டால் பெங்களூரு அணி வெற்றி பெறும். அதுவே கருப்பு மண் ஆடுகளமாக (Black Soil) இருந்தால் குஜராத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.

டாம் மூடி: "பெங்களூரு அணிக்குச் சற்றே கூடுதல் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். இதற்கு முக்கியக் காரணம் குஜராத் அணியின் பயணக் களைப்பு. அவர்கள் தர்மசாலாவில் இருந்து சண்டிகர், பிறகு அங்கிருந்து அகமதாபாத் எனத் தொடர்ந்து பயணம் செய்து விளையாடுகின்றனர். இது வீரர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வை ஏற்படுத்தும். பெங்களூரு அணி ஒரு முழுமையான பலத்துடன் இருப்பதால் அவர்களுக்கு சாதகம் அதிகம்."

IPL 2026: கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த வைபவ் சூர்யவன்ஷி.. பாதியில் நின்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கனவு

IPL 2026: கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த வைபவ் சூர்யவன்ஷி.. பாதியில் நின்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கனவு

நேருக்கு நேர்

இந்த சீசனின் லீக் சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. பெங்களூருவில் நடந்த போட்டியில் விராட் கோலி 81 ரன்கள் குவித்து பெங்களூருவை வெற்றி பெறச் செய்தார். அகமதாபாத்தில் நடந்த போட்டியில் ஜேசன் ஹோல்டர் மற்றும் ரபாடா பந்துவீச்சால் பெங்களூரு சரிவைச் சந்தித்து, குஜராத் வெற்றி பெற்றது. முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி 250 ரன்களுக்கு மேல் குவித்து குஜராத்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 30, 2026, 13:52 [IST]
Other articles published on May 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+