RCB vs DC: டிரெஸ்சை மாத்தியும் புண்ணியமில்ல.. பார்த்தீவ் அவுட்.. மிஸ்டர் 360 டி வில்லியர்சும் காலி
Recommended Video

பெங்களூரு:சொந்த மண்ணில் ஆடையின் நிறத்தை மாற்றியும், பெங்களூரு அணியின் தடுமாற்றம் மாறவில்லை. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பெங்களூருவில் நடக்கும் 20வது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
இரு அணிகளிலும் வீரர்களில் எவ்வித மாற்றமும் இல்லை. இப்போட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக பெங்களூரு அணி வீரர்கள் பச்சை வண்ண ஆடையில் களமிறங்கினர்.

நிதானமான ஆட்டம்
முதலில் பெங்களூரு அணியில் பார்த்தீவ் படேலும், கேப்டன் கோலியும் களம் இறங்கினர். மிக முக்கிய ஆட்டம் என்பதால் இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.

பார்த்தீவ் படேல் 6 ரன்கள்
தொடக்க வீரரான படேல் மிக நிதானமாக பந்துகளை எதிர்கொண்டார். பெங்களூரு அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது. 2வது ஓவரின் கடைசி பந்தில் படேல் மோரிஸ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டி வில்லியர்ஸ் கேட்ச்
அதற்கு அடுத்து வந்தார் மிஸ்டர் 360 டிவில்லியர்ஸ். அதிரடியாக ஆடுவார் என்பது போலவே ஆடினார். ஒரேயொரு சிக்சர் அடித்து உற்சாகப்படுத்திய அவர் 17 ரன்களில் வெளியேறினார்.

3வது விக்கெட் காலி
அதன் பிறகு.. கோலியுடன் ஸ்டோய்ன்ஸ் கைகோர்த்தார். இருவரும் ஓரளவு நம்பிக்கையுடன் ஆடினர். அணியின் ஸ்கோர் 66 ஆக இருக்கும் போது என்ன நினைத்தாரோ... தெரியவில்லை, படேல் பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பெங்களூரு தடுமாற்றம்
11 ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறி வருகிறது. இந்த போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற ரசிகர்களின் கனவு நிறைவேறுமா என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications