RCB vs DC: ஆமை வேக பெங்களூரு...!! சொதப்பிய வீரர்கள்.. 20 ஓவர்களில் 149 ரன்கள் குவிப்பு
Recommended Video

பெங்களூரு:டெல்லிக்கு எதிரான ஆமை வேக ஆட்டத்தை ஆடிய பெங்களூரு, 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை எடுத்துள்ளது.
பெங்களூருவில் நடக்கும் 20வது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் வீரர்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
இந்த போட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். அதன் முக்கியத் துவத்தை உணர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை வண்ண ஆடையில் களமிறங்கினர்.

மெதுவாக ரன் சேர்ப்பு
முதலில் பெங்களூரு அணியில் பார்த்தீவ் படேலும், கேப்டன் கோலியும் களம் இறங்கினர். ஒவ்வொரு பந்தையும் விஞ்ஞானி ரேஞ்சுக்கு ஆராய்ச்சி செய்யும் பார்த்தீவ் படேல் இம்முறையும் அதே பாணியை தான் கையில் எடுத்தார்.

13 ரன்கள்
ஏதோ.. ஒவ்வொரு பந்தையும், சிக்சருக்கும், பவுண்டரிக்கும் அனுப்பி வைப்பது போன்ற பாவனையுடன் அவரது ஆட்டம் இருந்தது. ஆனால் எடுத்தது என்னவோ வெறும் 13 ரன்கள். மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

டி வில்லியர்ஸ் அவுட்
அதை தொடர்ந்து களம் இறங்கியவர் மிஸ்டர் 360, எந்த திசையிலும் மட்டையை சுழற்றி பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் அனுப்புவர். ஒரேயொரு சிக்சர், பவுண்டரியுடன் திருப்தி அடைந்து 17 ரன்களில் வெளியேறினார்.

பெருத்த ஏமாற்றம்
அடுத்து வந்த ஸ்டோய்ன்ஸ் 15, மொயின் அலி 32, அக்ஷதிப் நாத் 19 என வந்தோம்... போனோம் என்ற கதை தான். ஏதோ பெரிதாக நடக்க போகிறது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு பெங்களூரு அணியின் பேட்டிங் பெருத்த ஏமாற்றம்.

149 ரன்கள் சேர்ப்பு
முட்டி மோதி ஆடிக்கொண்டிருந்த கோலியும் 18வது ஓவரில் வெளியேறினார். அவர் அடித்தது 41 ரன்கள். இது தான் அந்த அணி வீரர்களில் அதிகபட்ச ஸ்கோர். பின்வரிசை வீரர்களும் வந்த வேகத்தில் நடையை கட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு 149 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications