Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்திய அணியை யாராலும் காப்பாற்ற முடியாது”.. அடித்துக்கூறும் ஆர்.பி.சிங்.. காரணம் என்ன தெரியுமா??

நாக்பூர்: இந்திய அணியை யார் வந்தாலும் காப்பாற்ற முடியாது என முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.

Recommended Video

இந்திய அணியின் மோசமான நிலை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேச்சு

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு நாக்பூரில் நடைபெறவுள்ளது.

முதல் டி20 போட்டியில் படு தோல்வியடைந்த இந்திய அணி, 2வது போட்டியிலாவது வெற்றி பெறுமா என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

இந்திய அணி

இந்திய அணி

ஆசிய கோப்பை தொடரில் தொடர்ச்சியாக சொதப்பிய இந்திய அணி கடந்த ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் 208 ரன்களை குவித்தும் தோல்வியடைந்தது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு சரியில்லாததே தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அது மட்டுமே காரணமில்லை என முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.

ஆர்.பி.சிங் பேச்சு

ஆர்.பி.சிங் பேச்சு

இதுகுறித்து பேசிய அவர், டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இப்படி தோல்வி பெறுவது நல்ல அறிகுறிகள் இல்லை. ஆசிய கோப்பையில் தோற்ற போது ஹர்ஷல் பட்டேல், பும்ரா வந்தால் சரியாகிவிடும் எனக்கூறினர். ஆனால் ஹர்ஷல் பட்டேல் வந்தும் சொதப்பியுள்ளனர். அடுத்த 2 போட்டிகளில் பும்ரா வந்தாலும் நன்றாக செயல்படுவார்களா? என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

பும்ரா காயத்திலிருந்து திரும்பிய உடனே போட்டியை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் போது, எந்த இடத்திலும் இந்தியா கொஞ்சமும் கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தது மட்டுமே சற்று ஆறுதலாக இருந்தது. அந்த ஒரு நம்பிக்கை இந்திய அணியில் இல்லாதது போன்று தெரிகிறது.

பயப்படக்கூடாது

பயப்படக்கூடாது

இந்திய அணியின் ஃபீல்டிங் செட்-அப்பிலேயே சற்று பதற்றம் இருந்தது. யார்கர் பந்துகளை வீசும்போது உள் வட்டத்திற்குள் தேர்ட் மேன் மற்றும் பாயிண்ட் ஃபீல்டர்கள் வைப்பதற்கு பயப்படக்கூடாது. இந்த மாற்றத்தை கூட செய்யவில்லை என்றால், இந்தியாவால் 150 ரன்களை கூட கட்டுப்படுத்த முடியாது என ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.

Story first published: Friday, September 23, 2022, 16:11 [IST]
Other articles published on Sep 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+