பீஸ்ட் விஜய்யாக மாறிய பட்லர்.. தப்பு பண்ணிட்டீங்களே அட்மின்.. தல, தளபதி ரசிகர்கள் மோதல்
அகமதபாபாத்: ஐபிஎல் 15வது சீசன் இறுதிப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறுகிறது.இதில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.
Recommended Video
இந்த நிலையில், நடப்பு சீசனில் 4 சதங்கள் அடித்து பட்லர் செம ஃபார்மில் உள்ளார். இம்முறை ஆர்ஆர்க்கு பட்லர் கோப்பையை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் பட்லரை புகழ்ந்து ஆர்ஆர் போட்ட ட்வீ ட் ஒன்று குறித்து விஜய், அஜித் ரசிகர்களிடையே பிரச்சினையாக மாறியது.

பட்லர் அபாரம்
நடப்பு சீசனில் 16 போட்டியில் விளையாடியுள்ள ஜாஸ் பட்லர் 824 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் அடங்கும். இதன் மூலம் விராட் கோலியின் ஒரே சீசனில் அதிக சதமடித்த வீரர் என்ற பெருமையை ஜாஸ் பட்லர் சமன் செய்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் கூட பட்லர் அடித்த சதத்தால் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

பீஸ்ட் போஸ்டரில் பட்லர்
இந்த நிலையில் பட்லரின் சாதனையை பாராட்டும் வகையில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் போஸ்டரில் விஜய்க்கு பதிலாக பட்லர் பேட் வைத்து நிற்பது போல் ஆர்சிபி அணி ட்வீ ட் ஒன்றை போட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வெருகின்றனர். விஜய்யின் புகழ் வட இந்தியாவில் பரவி இருப்பதற்கு இதுவே சான்று என்றும் அவர்கள் கூறினர்.

பீஸ்ட் கிளைமாக்ஸ்
இதனால் கடுப்பான மற்ற நடிகர்களின் ரசிகர்கள் ஐயோ அட்மின் தப்பு பண்ணிட்டீங்களே. பீஸ்ட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் உலக அளவில் ஓட்டப்பட்டதாகவும், அது ரசிகர்களிடையே எடுப்படவில்லை என்றும் கூறி, அதை போல் பட்லருடன் ஓப்பீடு செய்துவிட்டீர்களே என்று சுட்டிக்காட்டினர். இதனால் பீஸ்ட் கிளைமாக்ஸ் போல் ஆர்ஆர் கிளைமாக்ஸ் சரியாக இருக்காது என்றும் அவர்கள் கிண்டலடித்தனர்.

விஜய் ரசிகர்கள் பதிலடி
இதற்கு பதிலடி தந்துள்ள விஜய் ரசிகர்கள், பீஸ்ட் திரைப்படம் கிளைமாக்ஸ் விமர்சிக்கப்பட்டாலும், நடப்பு ஆண்டில் அதிக வசூல் சாதனை செய்து இருப்பதாக கூறினர். பட்லரை பாராட்ட ராஜஸ்தான் அணி போட்ட ஒற்றை ட்வீ ட், தற்போது விஜய், அஜித் ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications