Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரு சின்னப் பிள்ளை.. நீயா ? நானா? ஹர்சல் பட்டேலுடன் என்ன சண்டை.. ரியான் பராக் விளக்கம்

மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ரியான் பராக் பெயரை கேட்டாலே ரசிகர்கள் அவ்வளவு எரிச்சல் அடைகிறார்கள்.

Recommended Video

Harshal Patelலுடன் ஏன் சண்டை Riyan Parag கூறிய காரணம் | Oneindia Tamil

அதற்கு காரணம் ரியான் பராக் களத்தில் நடந்து கொண்ட விதம் தான். இதுவரை கிரிக்கெட்டில் எந்த ஒரு சாதனையும் செய்யாத திமிர் பிடித்த வீரர் தான் ரியான் பராக்.

களத்தில் எதிரணி வீரர்களை முறைப்பது, கேட்ச் பிடித்து நக்கல் அடிப்பது, நடுவரை கேலி செய்வது என அனைத்து அடாவடி செயலையும் செய்து இருக்கிறார்.

ரியான் பராக் இன்னிங்ஸ்

ரியான் பராக் இன்னிங்ஸ்

நடப்பு சீசனில் 14 போட்டியில் விளையாடியுள்ள ரியான் பராக், மொத்தம் 183 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் பில்டிங்கில் கில்லி போல் செயல்பட்ட ரியான் பராக், 17 கேட்ச்களை பிடித்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது ரியான் பராக் நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கி 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.

ஹர்சல் பட்டேலுடன் மோதல்

ஹர்சல் பட்டேலுடன் மோதல்

அப்போது ஹர்சல் பட்டேலுடன் ரியான் பராக் மோதலில் ஈடுபட, அது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. தனது சகோதரியை இழந்து அணிக்கு திரும்பிய ஹர்சல் பட்டேலுடன் ரியான் பராக் நடந்து கொண்ட விதம், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த மோதல் குறித்து ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

அதில், கடந்த வருடம் நான் ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தேன். அப்போது என்னை டிரெஸிங் ரூம் நோக்கி அவர் என்னை கைகாட்டி இருக்கிறார். அப்போது நான் கவனிக்கவில்லை. ஹோட்டலுக்கு வந்து மறு ஒளிபரப்பை டிவியில் பார்க்கும் போது ஹர்சல் பட்டேல் செய்தது என் மனதை பாதித்தது.

சிறுப்பிள்ளை தனம்

சிறுப்பிள்ளை தனம்

இந்த நிலையில், மீண்டும் இந்த சீசனில் ஹர்சல் பட்டேலை பார்த்த போது, அவர் செய்தது நினைவுக்கு வந்தது. இதனால், அவர் பந்துவீச்சில் அடித்துவிட்டு, அவர் கடந்த ஆண்டு செய்ததை நான் மீண்டும் செய்தேன். இது தான் மோதலுக்கு காரணம். அப்போது முகமது சிராஜ் என்னிடம் வந்து நீ சின்னப் பையன், சின்னப் பையன் மாதிரி நடந்து கொள் என்று கூறினார். ஆனால் போட்டி முடிந்ததும் ஹர்சல் பட்டேல் என்னிடம் கை குலுக்காமல் சென்றுவிட்டார். அது கொஞ்சம் சின்னப் பிள்ளை தனமாக எனக்கு தெரிந்தது.

Story first published: Sunday, June 5, 2022, 17:10 [IST]
Other articles published on Jun 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+