Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராஜஸ்தான் மேட்ச்சில் தோனி இதைத் தான் செய்வார்.. அடித்து சொல்லும் விமர்சகர்கள்.. ரசிகர்கள் ஏமாற்றம்!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி அணியில் மாற்றம் செய்வாரா? இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டை ஆட வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தோனி அணியை மாற்றவே மாட்டார் என்று அடித்துக் கூறுகிறார்கள் விமர்சகர்கள்.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடைபெற்று வருகிறது. முதல் போட்டியிலேயே ஐபிஎல் பரபரப்பை பற்ற வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் போட்டியில் பரம எதிரி அணியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.

சிஎஸ்கே அணி சூப்பர் வெற்றி

சிஎஸ்கே அணி சூப்பர் வெற்றி

முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி அபார ஆட்டம் சேஸிங் செய்து வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு, பாப் டுபிளெசிஸ் அரைசதம் அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அந்த வெற்றிக்கு பின் சிஎஸ்கே மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் அடுத்த போட்டியில் ஆட உள்ளது சிஎஸ்கே. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் மாற்றம் இருக்குமா? என விவாதம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ருதுராஜ் கெயிக்வாட் சிஎஸ்கே அணியில் ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தயாரான ருதுராஜ்

தயாரான ருதுராஜ்

ருதுராஜ் கெயிக்வாட் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. அதன் பின் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியான நிலையில் சிஎஸ்கே அணியுடன் பயிற்சி மேற்கொண்டார். அவர் முழு அளவில் தயாக உள்ளதாக கூறப்படுகிறது.

மாற்றம் செய்வாரா தோனி?

மாற்றம் செய்வாரா தோனி?

இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் அவரை தோனி சேர்ப்பாரா? தோனி எப்போதும் வெற்றி பெற்ற அணியை அடுத்த போட்டியில் மாற்ற மாட்டார். அந்த வகையில் அவர் முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் இரண்டாவது போட்டியிலும் களமிறங்குவார் என விமர்சகர்கள் அடித்து கூறுகின்றனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இந்த தகவல் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் ஆட்டத்தை பார்க்க விரும்பிய சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. எனினும், போட்டியில் அணியில் தோனி என்ன மாற்றம் செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சிஎஸ்கே உத்தேச அணி

சிஎஸ்கே உத்தேச அணி

ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ள சிஎஸ்கே உத்தேச அணி - முரளி விஜய், ஷேன் வாட்சன், பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், கேதர் ஜாதவ், பியுஷ் சாவ்லா, லுங்கி நிகிடி / ஜோஷ் ஹேசல்வுட்.

Story first published: Tuesday, September 22, 2020, 16:35 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+