கடைசி நொடியில் ரிவ்யூ கேட்ட தோனி.. கெஞ்சி கூத்தாடிய தீபக் சாஹர்.. என்னதான் நடந்தது?
Recommended Video

ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரின் 25வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் தோனி கடைசி நொடியில் ரிவ்யூ கேட்டு ரசிகர்களை திகைக்க வைத்தார். அதிலும் ரிவ்யூ கேட்க தீபக் சாஹர் கெஞ்சியதும் சுவாரஸ்யமாக அமைந்தது.

தீபக் சாஹர் பௌலிங்
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 3வது ஓவரில் தீபக் சாஹர் பந்தை எதிர்கொண்ட ரஹானே பந்தை கணிக்கத் தவறினார். அவரது காலில் பந்து பட்டது. தீபக் சாஹர் எல்.பி.டபுள்யூ கேட்டார். அம்பயர் மறுத்து விட்டார்.

மன்றாடிய சாஹர்
அப்போது தோனி டிஆர்எஸ் ரிவ்யூ கேட்க மறுத்தார். தீபக் சாஹர் தோனி அருகே சென்று பந்து காலில் எங்கே பட்டது என சுட்டிக் காட்டி, கெஞ்சிக் கூத்தாடி தோனியை ரிவ்யூ கேட்க சம்மதிக்க வைத்தார்.

கடைசி நொடியில்..
தோனியும், சாஹரும் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கும் போது சரியாக ரிவ்யூ கேட்க நிர்ணயிக்கப்பட்ட 15 நொடிகள் முடிவுக்கு வர, அப்போது தோனி ரிவ்யூ கேட்டார். இது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஹானே அவுட்
பின்னர் ரிவ்யூவில் பந்து லெக்-ஸ்டம்ப்பை தகர்ப்பது தெரியவே, ரஹானேவுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. ரஹானே 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது தான் ராஜஸ்தான் அணியின் முதல் விக்கெட். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி மளமளவென விக்கெட்களை இழந்தது.

கடைசி நொடி சர்ச்சை
இந்த ரிவ்யூ கேட்கப்பட்ட போது 15 நொடிகள் முடிந்து விட்டது. தோனி ரிவ்யூ கேட்ட போது அம்பயர் மறுத்திருக்க வேண்டும் என சிலர் சர்ச்சையைக் கிளப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications