Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

19வது ஓவரில் ரன் ஓட சிரமப்பட்ட தோனி.. என்ன ஆச்சு என பதறிய ரசிகர்கள்.. என்ன நடந்தது?

Recommended Video

நோ பால் விவகாரம் : பொறுமை இழந்த தோனி

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே ஆன 25வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 152 ரன்கள் இலக்கை சென்னை அணி துரத்திய போது, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தோனி - அம்பதி ராயுடு இணைந்து அணியை மீட்டனர். இருவரும் அரைசதம் கடந்தனர். தோனி 20வது ஓவரின் 3ஆம் பந்து வரை பேட்டிங் செய்தார். ஆனால், கடைசி சில பந்துகளின் போது ரன் ஓட சிரமப்பட்டார்.

மூச்சு வாங்கியது

மூச்சு வாங்கியது

அவர் 19வது ஓவரில் 4வது பந்தில் 2 ரன் ஓடி முடித்த பின் அயற்சியால், மூச்சு வாங்கி நின்றார். அதன் பின் 5வது பந்திலும் 2 ரன் ஓடி முடித்து விட்டு நிற்கவே சிரமப்பட்டார் தோனி. அதன்பின் பிசியோதெரபிஸ்ட் அவருக்கு முதலுதவிப் பயிற்சிகள் அளித்தார்.

ரசிகர்கள் பதற்றம்

ரசிகர்கள் பதற்றம்

அதன் பின் தோனி சாதாரணமாக நின்று ஆடினாலும், ஏன் தோனிக்கு இப்படி ஆனது என ரசிகர்கள் பதறினார்கள். தோனி இதுபோல ரன் ஓட சிரமப்படுவது அபூர்வம். எனினும், இந்தப் போட்டியில் தோனி ஹெல்மட்டில் பலமாக அடிவாங்கினார். அது தான் இந்த சிரமத்துக்கு காரணமா?

ஹெல்மட்டில் தாக்கிய பந்து

ஹெல்மட்டில் தாக்கிய பந்து

17வது ஓவரின் 4வது பந்தில், ஆர்ச்சர் வீசிய பவுன்சரை கணிக்கத் தவறிய தோனி, பந்தை ஹெல்மட்டில் வாங்கினார். அதனால், ஹெல்மட்டில் பலமாக தாக்கியது பந்து. எனினும், தோனி அப்போது விரைவாக ரன் ஓடினார். அடுத்து 2 ஓவர்கள் வரை தோனி நன்றகாவே ஓடி, ஓடி ரன் எடுத்தார்.

ரசிகர்கள் நிம்மதி

ரசிகர்கள் நிம்மதி

போட்டி முடிந்த பின் தோனி சுறுசுறுப்பாகவே இருந்தார். சோர்ந்து காணப்படவில்லை. எனவே, தோனி ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். 20வது ஓவரில் தோனி ஆட்டமிழந்த பின் அடுத்த பந்து நோ-பால் என சர்ச்சை எழுந்தது. அம்பயர் நோ-பால் கொடுக்க மறுக்கவே தோனி களத்துக்கு சென்று வாக்குவாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 12, 2019, 11:51 [IST]
Other articles published on Apr 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+