Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரும் தொட முடியாத தோனியின் சாதனை.. முடிஞ்சா தொட்டுப் பாரு.. ரோஹித், கோலியை வம்பிழுக்கும் ரசிகர்கள்!

Recommended Video

4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய சென்னை

ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரில் தோனி கேப்டனாக தன் 100வது ஐபிஎல் வெற்றியை பதிவு செய்து சாதனை புரிந்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக 100வது வெற்றியை பெறும் முதல் வீரர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து, தோனி இந்த சாதனையை தன் வசமாக்கினார்.

மைல்கல் சாதனை

மைல்கல் சாதனை

இதுவரை தோனி 166 ஐபிஎல் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 100 வெற்றிகளை பெற்று அடுத்த சில ஆண்டுகளுக்கு யாராலும் எட்ட முடியாத மைல்கல்லை எட்டியுள்ளார்.

கெளதம் கம்பீர் 2ஆம் இடம்

கெளதம் கம்பீர் 2ஆம் இடம்

தோனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கெளதம் கம்பீர் 129 போட்டிகளில் கேப்டனாக இருந்து, 71 வெற்றிகள் பெற்றுள்ளார். அவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, வர்ணனை, அரசியல் என சென்றுவிட்டார்.

தொட முடியாது

தொட முடியாது

எனவே, கேப்டன் தோனியின் 100 வெற்றிகள் என்ற மைல்கல்லை அவ்வளவு எளிதில் எந்த ஐபிஎல் கேப்டனும் தொட்டு விட முடியாது என்றே தெரிகிறது. தோனி ரசிகர்கள் "முடிஞ்சா தொட்டுத் தான் பாரு" என வடிவேலு வசனத்தை சொல்லி பிற ஐபிஎல் கேப்டன்களான ரோஹித் சர்மா, கோலியை இணையத்தில் வம்பிழுத்து வருகிறார்கள்.

எத்தனை போட்டிகள்?

எத்தனை போட்டிகள்?

தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 152 போட்டிகளில் கேப்டனாக ஆடி 95 வெற்றிகளை பெற்றுள்ளார். ரைஸிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கு 2016 சீசனில் கேப்டனாக இருந்த தோனி 14 போட்டிகளில் ஐந்தில் மட்டுமே வெற்றி தேடிக் கொடுத்தார்.

பதவி நீக்கம்

பதவி நீக்கம்

2017 ஐபிஎல் தொடரில் புனே அணி தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. எனினும், தோனி அடுத்த ஆண்டில் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து, கோப்பை வென்று கொடுத்தார்.

ஏழில் ஆறு

ஏழில் ஆறு

அதே போல, 2019 ஐபிஎல் தொடரிலும் 7 போட்டிகளில் 6 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. தோனி இந்த சீசனிலும் கோப்பை வென்று கொடுப்பார் என்ற பேச்சு கிளம்பி உள்ளது.

Story first published: Friday, April 12, 2019, 10:44 [IST]
Other articles published on Apr 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+