Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு இப்படி கேட்ச் பிடிப்பாருன்னு எனக்கு எப்படி தெரியும்.. பரிதாபமாக அவுட்டான கேதார் ஜாதவ்!!

Recommended Video

4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய சென்னை

ஜெய்ப்பூர் : சென்னை - ராஜஸ்தான் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 25வது லீக் போட்டியில் சென்னை அணி வீரர் கேதார் ஜாதவ் 1 ரன்னில் கேட்ச் கொடுத்து பரிதாபமாக ஆட்டமிழந்தார்.

சென்னை அணி விரைவாக விக்கெட்களை இழந்து வந்த போது, கேதார் ஜாதவ்வும் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றம் அளித்தார். அவரது விக்கெட்டுக்கு முக்கிய காரணம் பென் ஸ்டோக்ஸ்!

கட் ஷாட் ஆடிய ஜாதவ்

கட் ஷாட் ஆடிய ஜாதவ்

ஆறாவது ஓவரை ராஜஸ்தான் அணி வேகப் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை சந்தித்த ஜாதவ் பேக்வேர்டு திசையில் கட் ஷாட் அடித்தார். அவர் பீல்டர்களுக்கு இடையே பந்தை அடிக்க முற்பட்டார்.

கடினமான கேட்ச்

கடினமான கேட்ச்

பந்து ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ்-க்கு சில அடி தூரம் தள்ளி சென்றது. அப்போது ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மிகக் கடினமான அந்த கேட்சை பிடித்தார் பென் ஸ்டோக்ஸ்.

சரியான ஷாட்

சரியான ஷாட்

இதனால், வெறும் 1 ரன் அடித்து இருந்த கேதார் ஜாதவ் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது சென்னை அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. ஜாதவ் சரியான விதத்தில் அந்த ஷாட்டை ஆடி இருந்தாலும், பென் ஸ்டோக்ஸ் பிடித்த அற்புத கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஜாதவ் இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தார். மற்ற போட்டிகளில் பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை. அதை ராஜஸ்தான் போட்டியிலும் தொடர்ந்தார் ஜாதவ்.

Story first published: Thursday, April 11, 2019, 23:53 [IST]
Other articles published on Apr 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+