Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ல நிறைய பணம் விளையாடுது.. அதுக்காக தோனி, அஸ்வின் இப்படி செய்யறது நல்லா இல்லை!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி எல்லை மீறி களத்துக்குள் நுழைந்து அம்பயருடன் வாக்குவாதம் செய்தது தவறு என பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் இதற்கெல்லாம் ஐபிஎல்இல் விளையாடும் ஏராளமான பணம்தான் காரணம் என சுற்றி வளைத்து கூறியுள்ளார்.

நோ-பால் சர்ச்சை

நோ-பால் சர்ச்சை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் பேட்ஸ்மேன் மார்புக்கு மேல் பந்தை ஃபுல் டாஸாக வீசினார் பென் ஸ்டோக்ஸ். அதற்கு அம்பயர் முதலில் நோ-பால் கொடுத்து விட்டு பின்னர் அதை திரும்பப் பெற்றார்.

எல்லை மீறிய தோனி

எல்லை மீறிய தோனி

இதனால், பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவத்தின் போது தோனி ஆட்டமிழந்து களத்துக்கு வெளியே இருந்தார். எனினும், எல்லை மீறி களத்துக்குள் நுழைந்து அம்பயருடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தோனி. இது விதிமீறல் என்பதால் தோனிக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

கேப்டன்கள் செய்தது சரியல்ல

கேப்டன்கள் செய்தது சரியல்ல

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ் இது குறித்து கூறுகையில், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தரும் அழுத்தம் மற்றும் ஐபிஎல்-இல் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அதிகமான பணம் ஆகியவை இருந்தாலும், இரண்டு சம்பவங்களில் கேப்டன்கள் தோனி மற்றும் அஸ்வின் ஈடுபட்டது சரியல்ல என கூறியுள்ளார்.

அழுத்தமும், பணமும்

அழுத்தமும், பணமும்

தோனி அம்பயருடன் எல்லை மீறி வாக்குவாதத்தில் ஈடுபட்டது மற்றும் அஸ்வின் மன்கட் ரன் அவுட் செய்தது போன்றவற்றை குறிப்பிடும் மார்க் வாஹ், அதற்கு உரிமையாளர்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும் என தரும் அழுத்தமும், பணமும் தான் காரணம் என மறைமுகமாக கூறுகிறார்.

சரி தானோ?

சரி தானோ?

அதானே.. இந்தியா எத்தனையோ சர்வதேச போட்டியில் அம்பயர் அளித்த தவறான முடிவால் தோல்வி அடைந்துள்ளது. அப்போது தோனி இது போல அம்பயருடன் சண்டை போட்டு நாம் பார்த்ததுண்டா? மார்க் வாஹ் சொல்றது சரி தானோ?

Story first published: Friday, April 12, 2019, 21:11 [IST]
Other articles published on Apr 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+