Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியா ரன் அவுட் ஆவாங்க? ரெய்னாவை பார்த்து கடுப்பான சிஎஸ்கே கோச் ஸ்டீபன் பிளெம்மிங்!!

Recommended Video

நோ பால் விவகாரம் : பொறுமை இழந்த தோனி

ஜெய்ப்பூர் : 2௦19 ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா மோசமான முறையில் ரன் அவுட் ஆனார்.

அதைக் கண்டு ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் ரெய்னா ஆட்டமிழந்த விதத்தை பார்த்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

துவக்கம் மோசம்

துவக்கம் மோசம்

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 151 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடத் துவங்கிய சென்னை அணிக்கு வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் 2வது ஓவரில் ரெய்னா உனட்கட் ஓவரை சந்தித்தார்.

ஓட முயன்ற ரெய்னா

ஓட முயன்ற ரெய்னா

அந்த ஓவரின் 5வது பந்தை ரெய்னா, தனக்கு பின் திசையில், ராஜஸ்தான் வீரர் ஆர்ச்சர் அருகே தட்டிவிட்டார். பின்னர் ரன் ஓட முயன்ற ரெய்னா முதலில் பந்து எங்கே செல்கிறது என திரும்பிப் பார்த்தார்.

மீண்டும் பார்த்தார்

மீண்டும் பார்த்தார்

அத்தோடு அவர் முழுமூச்சில் ஓடத் துவங்கி இருந்தால் பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. ஆனால், ரெய்னா ஒரு அடி எடுத்து வைத்து விட்டு மீண்டும் பின்னே திரும்பிப் பார்த்தார். பந்தை ஆர்ச்சர் எடுக்கப் போவதை கண்ட உடன், வேகமெடுத்தார் ரெய்னா.

துல்லியமான த்ரோ

துல்லியமான த்ரோ

ஆனால், எதிர்முனை கிரீஸை தொடுவதற்குள், ஆர்ச்சர் அடித்த துல்லியமான த்ரோவில் ரன் அவுட் செய்யப்பட்டார். ரெய்னா இரண்டாவது முறை அரை வினாடி திரும்பிப் பார்த்ததால், தன் வேகத்தை இழந்து ஆட்டமிழந்தார்.

பந்தைப் பார்க்கிறேன்

பந்தைப் பார்க்கிறேன்

ஒரு அனுபவ வீரர் இப்படி "பந்தைப் பார்க்கிறேன்" என ரன் அவுட் ஆனது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. முதல் ஓவரில் வாட்சன், இரண்டாவது ஓவரில் ரெய்னா என முன்னணி வீரர்களை இழந்து தவித்தது சென்னை.

Story first published: Thursday, April 11, 2019, 23:20 [IST]
Other articles published on Apr 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+