Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்சன் அடிச்சதை கூட மறக்க முடியும்.. ஆனா இது.. லுங்கி செய்த காரியம்.. உறைந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்

ஷார்ஜா : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மறக்கவே முடியாத அளவுக்கு சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கியது.

இதில் சஞ்சு சாம்சன் அதிரடி முதலில் மிரட்டலாக இருந்தது. அதில் இருந்து தோனி பந்துவீச்சை மாற்றி, சிஎஸ்கே அணியை ஓரளவு மீட்டார்.

ஆனால், கடைசி ஓவரில் யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் லுங்கி நிகிடி பந்துவீச்சில் 4 சிக்ஸர் அடித்தார். நிகிடி படுமோசமாக பந்து வீசி அடுத்தடுத்து நோ பால் வீசி சிஎஸ்கே ரசிகர்களை உறைய வைத்தார்.

ராஜஸ்தான் - சென்னை போட்டி

ராஜஸ்தான் - சென்னை போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே, இந்தப் போட்டியில் அம்பதி ராயுடுவை நீக்கி இருந்தது. ருதுராஜ் கெயிக்வாட் வாய்ப்பு பெற்று இருந்தார்.

சிஎஸ்கே எடுத்த முடிவு

சிஎஸ்கே எடுத்த முடிவு

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆட்டத்தின் பின்பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்துவீச முடியாது என்பதை கருத்தில் கொண்டு அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடி பேட்டிங் செய்து மிரள வைத்தது.

சஞ்சு சாம்சன் விளாசல்

சஞ்சு சாம்சன் விளாசல்

அந்த அணியின் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். அவர் 9 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து இருந்தார். அவரை அடுத்து ஸ்டீவ் ஸ்மித்தும் விளாசினார். அவர் 47 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அவர்கள் ஆட்டத்தால் சிஎஸ்கே அணி மிரண்டது.

எகிறிய ரன் ரேட்

எகிறிய ரன் ரேட்

ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்த போது ரன் ரேட் ஓவருக்கு 12 வரை கூட எகிறியது. சிஎஸ்கே அணியில் கூடுதல் பந்துவீச்சாளர்கள் இல்லாததை சரியாக பயன்படுத்தி சுழற் பந்துவீச்சாளர்களை வெளுத்து எடுத்தது ராஜஸ்தான்.

லேசாக மீண்ட சிஎஸ்கே

லேசாக மீண்ட சிஎஸ்கே

சாம்சன், ஸ்மித் விக்கெட் வீழ்ந்த பின் சிஎஸ்கே அணி லேசாக மீண்டது. ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. சிஎஸ்கே அணி எப்படியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 190 முதல் 195 ரன்களுக்குள் சுருக்கி விடும் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

அந்த கடைசி ஓவர்

அந்த கடைசி ஓவர்

ஆனால், கடைசி ஓவரில் நடந்ததே வேறு. ஆர்ச்சர் அந்த ஓவரை சந்தித்தார். லுங்கி நிகிடி வீசிய அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அனாயசமாக சிக்ஸ் அடித்தார். அதன் பின் தடுமாறிய நிகிடி அடுத்த இரண்டு பந்துகளை நோ பாலாக வீசினார். அதையும் சிக்ஸருக்கு விரட்டினார் ஆர்ச்சர்.

இரண்டு நோ பால், 4 சிக்ஸ்

இரண்டு நோ பால், 4 சிக்ஸ்

கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளை வீசி முடிக்கும் முன் 2 பந்துகளில் 4 சிக்ஸ், இரண்டு நோ பால், 1 வைடு வீசி அதிர்ச்சி அளித்தார் லுங்கி நிகிடி. கடைசி 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அந்த ஓவரின் மட்டும் 30 ரன்கள் கொடுத்தார்.

2 பந்துகளில் 27 ரன்கள்

2 பந்துகளில் 27 ரன்கள்

அவரது இரண்டு நோ பால், வைடால் முதல் இரண்டு பந்துகளில் 27 ரன்கள் கொடுத்து சிஎஸ்கே அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தினார் நிகிடி. இது ஒரு மோசமான சாதனையாக அமைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 216 ரன்கள் குவித்தது.

சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

சிஎஸ்கே அணியின் மோசமான பந்துவீச்சால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி ஒரு மோசமான அடியை சிஎஸ்கே அணி வாங்கும் என யாரும் நினைக்கவில்லை. இந்தப் போட்டி மூலம் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பலவீனம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

Story first published: Tuesday, September 22, 2020, 23:00 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+