For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது .

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி அதிரடி ஆட்டம் ஆட விருப்பம் இல்லாமல் அதிர்ச்சி அளித்து தோல்வி அடைந்தது.

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் தொடங்கியது. லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் சுற்றின் நான்காவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது.

அம்பதி ராயுடு நீக்கம்

அம்பதி ராயுடு நீக்கம்

சிஎஸ்கே அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய அம்பதி ராயுடு நீக்கப்பட்டு, இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் அணியில் இடம் பெற்றார். இது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ருதுராஜ் கெயிக்வாட் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சில நாட்கள் முன்பு தான் மீண்டார்.

ராஜஸ்தான் பேட்டிங்

ராஜஸ்தான் பேட்டிங்

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் அபாரமாக பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் தன் அறிமுகப் போட்டியில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும்,சஞ்சு சாம்சன் - ஸ்டீவ் ஸ்மித் போட்டியை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு சிஎஸ்கே பந்துவீச்சை பந்தாடினர்.

9 சிக்ஸ்

9 சிக்ஸ்

சஞ்சு சாம்சன் 9 சிக்ஸ் அடித்து 32 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அதன் பின் விக்கெட்கள் சரிந்தன. 19 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 186 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்கள் இழந்து இருந்தது.

30 ரன்கள்

30 ரன்கள்

20வது ஓவரில் லுங்கி நிகிடி வீசிய முதல் நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸ் அடித்தார் ஜோப்ரா ஆர்ச்சர். அதில் இரண்டு நோ பால் வேறு. அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் சேர்த்தது சிஎஸ்கே. ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 216 ரன்கள் குவித்தது.

முரளி விஜய் - ஷேன் வாட்சன்

முரளி விஜய் - ஷேன் வாட்சன்

அடுத்து ஆடிய சிஎஸ்கே அணிக்கு முரளி விஜய் - ஷேன் வாட்சன் நிதானமாக துவங்கி அதிரடி துவக்கம் அளித்தனர். வாட்சன் 21 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். முரளி விஜய் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். பாப் டுபிளெசிஸ் நிதான ஆட்டம் ஆடினார்.

சாம் கர்ரன்

சாம் கர்ரன்

நான்காம் வரிசையில் சாம் கர்ரன் இறங்கி 2 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து 6 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து முந்தைய போட்டி போலவே நடையைக் கட்டினார். தன் அறிமுகப் போட்டியில் ஆடிய ருதுராஜ் டக் அவுட் ஆனார். அடுத்து பாப் டுபிளெசிஸ் - கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தனர்.

பாப் டுபிளெசிஸ் நிதானம்

பாப் டுபிளெசிஸ் நிதானம்

இவர்கள் இருவரும் ஓவருக்கு 8 ரன்கள் என்ற ரன் ரேட்டையே தொடர்ந்தனர். அதிலும் பாப் டுபிளெசிஸ் பவுண்டரி அடிக்கும் ஆர்வமே இன்றி நடந்து கொண்டார். ஜாதவ் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் பாப் டுபிளெசிஸ் அதிரடி காட்டினார்.

வெற்றி பெற முயலவில்லை

வெற்றி பெற முயலவில்லை

ஆமை வேகத்தில் ஆடி வந்த அவர் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தோனி ஏழாவது பேட்ஸ்மேன் ஆக வந்து கடைசி நேரத்தில் சிக்ஸ் அடிக்காமல் சிங்கிள் ரன்கள் எடுத்து வந்தார். சிஎஸ்கே அணியில் டுபிளெசிஸ் முதலில் நிதான ஆட்டம் ஆடியது, தோனி நிதான ஆட்டம் ஆடியது அந்த அணி வெற்றி பெற முயலவில்லை என்பதை வெளிப்படையாக காட்டியது.

எட்ட முடியாத இலக்கு

எட்ட முடியாத இலக்கு

கடைசி ஓவரில் 37 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எட்ட முடியாத இலக்கு இருக்கும் போது தோனி அந்த ஓவரில் 3 சிக்ஸ் அடித்து இலக்கை நெருங்கினார். சிஎஸ்கே அணி 6 விக்கெட்கள் இழந்து 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே நோக்கம் என்ன?

சிஎஸ்கே நோக்கம் என்ன?

சிஎஸ்கே அணி முயற்சி செய்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், அந்த அணி வெற்றியை விட நெட் ரன் ரேட் குறையாமல் ஆட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியதால் கடைசி வரை விக்கெட் இழக்காமல் ஆடி பின் அதிரடி காட்டி உள்ளது.

ராஜஸ்தான் வெற்றி

ராஜஸ்தான் வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன் முதல் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. அந்த அணியின் ராகுல் டேவாட்டியா 3 விக்கெட் எடுத்து அசத்தினார். சிஎஸ்கே அணியின் தோல்விக்கு அவரும் முக்கிய காரணம்.

Story first published: Tuesday, September 22, 2020, 23:45 [IST]
Other articles published on Sep 22, 2020
English summary
IPL 2020 News in Tamil : RR vs CSK : Rajasthan Royals vs Chennai Super Kings 4th match update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+