For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவுட்டுன்னா அவுட்தான்.. என்ன இதெல்லாம்? போட்டி நடக்கும் போதே பொங்கிய சாக்ஷி தோனி.. வெடித்த சர்ச்சை

ஷார்ஜா : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அம்பயர் சிஎஸ்கே அணிக்கு எதிராக தவறான தீர்ப்பை அளித்தார்.

அதை எதிர்த்து தோனி களத்திலேயே அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். அது சர்ச்சை ஆனது.

இந்த நிலையில், தன் கணவருக்கு ஆதரவாக அந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் சாக்ஷி தோனி அம்பயரை விளாசி ட்வீட் ஒன்றை போட்டு சர்ச்சையைக் கிளப்பினார்.

ராஜஸ்தான் போட்டி

ராஜஸ்தான் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக 216 ரன்கள் குவித்தது. சாம்சன் 74, ஸ்டீவ் ஸ்மித் 69 ரன்கள் குவித்தனர்.

டாம் கர்ரன்

டாம் கர்ரன்

ராஜஸ்தான் பேட்டிங் செய்த போது டாம் கர்ரன் ரன் ஏதும் எடுக்காமல் ஆடி வந்த போது 18வது ஓவரில் அந்த சம்பவம் நடந்தது. தீபக் சாஹர் வீசிய அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை தோனி கேட்ச் பிடித்து அவுட் கேட்டார். முதலில் அம்பயர் அவுட் கொடுத்தார்.

அவுட் இல்லை?

அவுட் இல்லை?

ஆனால், பந்து காலில் பட்டுத் தான் கேட்ச் சென்றது என்பதும், தோனி ஒரு பிட்ச் ஆன பந்தை தான் கேட்ச் செய்தார் என்பதும் என ரீப்ளேவில் தெரிந்ததால் அம்பயர்கள் முடிவை மாற்றினர். ஆனால், பந்து காலில் பட்டது எல்பிடபுள்யூ ஆகும். அதை அம்பயர்கள் பார்க்கவில்லை.

தோனி கோபம்

தோனி கோபம்

நியாயமாக தர வேண்டிய எல்பிடபுள்யூவும் கொடுக்காமல், கேட்ச்சையும் இல்லை எனக் கூறியதால் தோனி கோபம் கொண்டார். அம்பயர்களிடம் அதுபற்றி விவாதம் செய்தார். இது சர்ச்சை ஆனது. இணையத்தில் சிலர் அம்பயர் செய்தது தான் சரி என வாதிட்டனர்.

சாக்ஷி தோனி ட்வீட்

சாக்ஷி தோனி ட்வீட்

இந்த நிலையில், தோனியின் மனைவி சாக்ஷி திடீரென ஒரு ட்வீட் பதிவிட்டார். அதில் "டெக்னாலாஜியை பயன்படுத்தினால் அதை சரியாக பயன்படுத்தவும். அவுட் என்றால் அவுட் தான்.. அது எல்பிடபிள்யூவாக இருந்தால் என்ன கேட்ச்சாக இருந்தால் என்ன? என பொங்கி இருந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

அவரது ட்வீட் சர்ச்சையைக் கிளப்பியது. போட்டி நடக்கும் பொதே ஒரு அணியின் கேப்டனின் மனைவி அம்பயர் முடிவை எதிர்த்து கருத்து கூறியது அதிர்ச்சி அளித்தது. பின்னர் அந்த ட்வீட்டை அவர் அழித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

இந்தப் போட்டியில் 217 ரன்களை சேஸிங் செய்த சிஎஸ்கே அணி நிதான ஆட்டம் ஆடி, வெற்றி பெற முடியாத சூழலில் அதிரடி ஆட்டம் ஆடி 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. தோனி நெட் ரன் ரேட்டை குறைக்கவே இப்படி நிதான ஆட்டம் ஆட வைத்ததாக புகாரும் எழுந்தது.

Story first published: Wednesday, September 23, 2020, 0:30 [IST]
Other articles published on Sep 23, 2020
English summary
IPL 2020 News in Tamil : RR vs CSK - Sakshi Dhoni blasts umpire for not giving out
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+