Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷார்ஜா மேட்டர் இதுதான்.. தோனி எடுத்த முடிவு.. செம சிக்கலில் ராஜஸ்தான்!

ஷார்ஜா : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் இரண்டாவது போட்டியிலும் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

கேப்டன் தோனி மீண்டும் தான் ஏன் பந்துவீச்சை தேர்வு செய்தேன் என விளக்கம் அளித்தார்.

ஷார்ஜா ஆடுகளம் மற்ற இரண்டு ஆடுகளங்களை விட வித்தியாசமாக இருந்தாலும் சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்ததன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது சிஎஸ்கே.

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகம் இருப்பதால் அந்த நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்தது பிசிசிஐ. அங்கே மூன்று நகரங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

மைதானம்

மைதானம்

துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட மூன்று மைதானங்களில் தான் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்று ஆடுகளங்களும் பந்துவீச்சுக்கு சற்றே மந்தமானவை. அதிலும் ஷார்ஜா ஆடுகளம் சற்று வித்தியாசமானது.

ஸ்விங் ஆகும்

ஸ்விங் ஆகும்

துபாய், அபுதாபி ஆடுகளங்களில் முதல் சில ஓவர்கள் மட்டும் புதிய பந்து ஸ்விங் ஆகும். அதன் பின் மந்தமாக மாறி விடும். ஆனால், ஷார்ஜாவில் பந்துவீச்சு பெரிதாக எடுபடாது. அங்கே போட்டியின் பின்பகுதியில் பனிப் பொழிவு இருக்கும்.

பனிப்பொழிவு

பனிப்பொழிவு

மற்ற இரண்டு மைதானங்களிலும் பனிப்பொழிவு இருக்கும். அதனால் தான் அபுதாபியில் நடந்த முதல் போட்டியில் தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் மூலம், இரண்டாம் இன்னிங்க்ஸில் பந்துவீசும் அணி பனிப் பொழிவில் சிக்கி சரியாக பந்து வீச முடியாத நிலை ஏற்படும்.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

ஷார்ஜா ஆடுகளத்தில் பனிப் பொழிவு மட்டுமின்றி, ஆடுகளமும் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் தோனி மீண்டும் டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ருதுராஜ் கெயிக்வாட்

ருதுராஜ் கெயிக்வாட்

அம்பதி ராயுடுவுக்கு பதில் சிஎஸ்கே அணியில் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் களமிறங்கினார். அவர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பதி ராயுடு முழு உடற்தகுதியுடன் இல்லை என தோனி அறிவித்ததும் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Story first published: Tuesday, September 22, 2020, 20:20 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+