Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Memes: "டிராவிட் அங்கிள்.. என் ஹோம்வொர்க்கை எழுதி வைங்க" வைபவ் சூர்யவன்ஷியால் தெறிக்கும் மீம்ஸ்!

மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணிக்காக அபாரமாக விளையாடி 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசி சாதனை படைத்தார். இதனை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

கேஜிஎஃப் 1 படத்தில் ஒரு போலீஸ் இம்பெக்டரை பாட்டிலால் அடிக்கும் சிறுவனான ராக்கி, "நான் ஒன்னும் பொடியன் அல்ல.. என் பேரு ராக்கி" என்று சொல்லுவார். இதில் வரும் சிறுவனை வைபவ் சூர்யவன்ஷியாக மாற்றி, "நான் ஒன்னும் பொடியன் இல்ல.. என் பேரு வைபவ் சூர்யவன்ஷி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நான் அடிச்ச 10 பேருமே டான் தான்டா ரகம்.

ipl 2025 memes Vaibhav Suryavanshi

சூர்யவம்சம் படத்தில் பேரன் சக்திவேல் தாத்தா சக்திவேலுக்கு "பாயாசம் சாப்பிடுங்க பிரண்ட்" என்று கொடுப்பார். அதனை சரத் குமார் வீட்டிற்கு சென்று சாப்பிடுகிறேன் என்று சொல்வார். அதில் வரும் சரத் குமாரை ராகுல் டிராவிட்டாகவும், பேரனை வைபவ் சூர்யவன்ஷியாகவும் மாற்றி, "டிராவிட் அங்கிள்.. என் ஹோம்வொர்க்கை எழுதி வைங்க.. நான் போயிட்டு பொழந்திட்டு வரேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்றா சக்க ரகம்.

ipl 2025 memes Vaibhav Suryavanshi

சென்னை - 28 படத்தில் சின்னப் பசங்களிடன் சிக்கிக் கொள்ளும் ஷார்க்ஸ் அணியின் பவுலர் பழனி, "டேய்.. அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா" என்று சொல்லுவார். இதில் சின்னப் பையனாக வைபவ் சூர்யவன்ஷியையும், பழனியாக குஜராத் அணி பவுலர்களையும் மாற்றி, "டேய்.. அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என்னைய காப்பாத்துங்கடா ரகம்.

ipl 2025 memes Vaibhav Suryavanshi

சிங்கம் 2 படத்தில் கருவக்குளம் ஏரியாவுக்குள் செல்லும் சூர்யா, "லாரன்ஸ் எங்க" என்று கேட்பார். அதற்கு யாரென்றே தெரியாத ஒருவர் திடீரென "தெரியாது சார்" என்று சொல்ல, சடாரென சூர்யா ஒரே அடியாக நொறுக்குவார். அதனை அப்படியே மாற்றி சூர்யாவாக சிஎஸ்கே ரசிகர்களை மாற்றி, வைபவ் சூர்யவன்ஷி இன்னிங்ஸை பார்த்துவிட்டு நேராக சிஎஸ்கே வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்று தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி ரூம் நம்பர் கேட்பதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

ipl 2025 memes Vaibhav Suryavanshi

14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், "நல்லவேளை.. எங்க அப்பா மேட்ச் பார்க்காமல் தூங்கிட்டாரு போல.. இல்லைனா இவன வச்சு ஒரு கடிய போட்ருப்பாரு எனக்கு" என்று சொல்வதாக பதிவிட்டுள்ள மீம் ஒவ்வொரு இளைஞனின் குமுறல் ரகம்.

ipl 2025 memes Vaibhav Suryavanshi
Story first published: Tuesday, April 29, 2025, 10:18 [IST]
Other articles published on Apr 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+