Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஹே நகருங்க”.. ஹெல்மட்டை கழற்றி எறிந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விக்கெட் கீப்பர்.. சிறந்த கேட்ச்

கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் சாதுரியமான விஷயம் ஒன்றை செய்தார். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அப்போது சஞ்சு சாம்சன் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். அடுத்து அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் களம் இறங்கினார். அவர் அதிரடியாக ஆடினார். அப்போது வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை அவர் தூக்கி அடித்தார். ஆனால் பந்து உயரமாக சென்றது. பின்னால் நின்றிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் பந்தை பிடிப்பதற்கு தயாரானார்.

RR vs KKR Quinton de Cock Smart Move Saves a Catch Against RR

ஆனால், பந்து மிகவும் உயரத்துக்கு சென்றதால் அதை சரியாக பார்க்க முடியாது என்பதை உணர்ந்து ஒரு வினாடியில் தனது ஹெல்மட்டை அவிழ்த்து எறிந்தார். அதன் பின், தான் பந்தை பிடிப்பதாக மற்ற ஃபீல்டர்களுக்கு அறிவித்தார். பின்னர் துல்லியமாக கேட்சையும் பிடித்தார்.

அவரது சமயோசிதமான செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அனுபவம் வாய்ந்தவரான குவின்டன் டி காக் தனது அனுபவத்தையும், சாமர்த்தியத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார் என விமர்சகர்களும் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி அவரை பாராட்டி வருகின்றனர்.

ஹெல்மட்டை அவர் அணியாமல் இருந்திருந்தால் அவரால் அதிக உயரத்துக்கு சென்ற பந்தை சரியாக பார்த்திருக்க முடியாது. ஹெல்மெட்டின் முன்பகுதி அவரது பார்வையை மறைத்திருக்கும். அதை தவிர்க்கவே அவர் ஹெல்மட்டை அவிழ்த்து எறிந்தார். இதைத்தான் ரசிகர்களும், விமர்சகர்களும் சுட்டிக்காட்டி பாராட்டி வருகின்றனர்.

இந்த போட்டியில் ரியான் பராக் 15 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரிசையாக விக்கெடுகளை இழந்தது. வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

செய்தி சுருக்கம்:

  • ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விக்கெட் கீப்பர் சமயோசிதமாக ஹெல்மெட்டை கழற்றி கேட்ச் பிடித்தார்.
  • வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை ரியான் பராக் தூக்கி அடித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
  • விக்கெட் கீப்பரின் சமயோசித செயலை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.
  • ரியான் பராக் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
  • வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ராஜஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Story first published: Wednesday, March 26, 2025, 21:33 [IST]
Other articles published on Mar 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+