Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்போங்க ரஹானே! சுனில் நரைன் ஆடும் போது இப்படியா செய்வீங்க? கேலி செய்து சிரிக்கும் ரசிகர்கள்!

Recommended Video

IPL 2019: Kolkata vs Rajasthan | அரைசதம் அடித்து அணியைக் கவிழ்க்கும் பேட்ஸ்மேன்கள்.. வீடியோ

ஜெய்ப்பூர் : "சுனில் நரைன் பேட்டிங் செய்யும் போது ஸ்பின்னரை இறக்கினா இப்படி தான் நடக்கும்" என ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவை பார்த்து பலரும் சிரித்து வருகிறார்கள்.

2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் அணி, அடுத்து பந்துவீச்சிலும் சொதப்பியது.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 140 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின், சுனில் நரைன் அதிரடி துவக்கம் அளித்தனர்.

2வது ஓவர்

2வது ஓவர்

இவர்கள் பேட்டிங் செய்த போது, இரண்டாவது ஓவரில் சுழற் பந்துவீச்சாளர் கௌதமை பந்துவீச அழைத்தார் ரஹானே. அந்த ஓவர் முழுவதும் தானே பேட்டிங் செய்த சுனில் நரைன், 4 ஃபோர், 1 சிக்ஸ் என அதிரடியாக அடித்து ஆடினார். அந்த ஓவரில் மட்டும் கொல்கத்தா அணிக்கு 22 ரன்கள் கிடைத்தது.

சுனில் நரைனின் பலம்

சுனில் நரைனின் பலம்

சுழற் பந்துவீச்சாளரான சுனில் நரைனை துவக்க வீரராக களமிறக்கி "விக்கெட் போனாலும், பரவாயில்லை. அடித்து ஆட வேண்டும்" என கூறியுள்ளது கொல்கத்தா அணி நிர்வாகம். அதற்கேற்ப அவரும் கடந்த ஐபிஎல் தொடர் முதல் இப்போது வரை அதிரடி காட்டி வருகிறார். நரைனின் பலம் சுழற் பந்துவீச்சை எளிதாக அடித்து ஆடுவதுதான்.

பலியாடு கெளதம்

பலியாடு கெளதம்

இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே என்ன நினைத்தாரோ, சுழற்பந்துவீச்சாளர் கெளதமை பலியாடாக சுனில் நரைனுக்கு அர்ப்பணித்தார். நரைனும், கரும்பு தின்னக் கூலியா என அடித்து துவைத்து விட்டார்.

கொல்கத்தா வெற்றி

கொல்கத்தா வெற்றி

ரசிகர்கள் பலரும் ரஹானே செய்த இந்த அடிப்படை தவறை சுட்டிக் காட்டி கலாய்த்து வருகிறார்கள். சுனில் நரைன் இந்தப் போட்டியில் 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 14 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 8, 2019, 10:06 [IST]
Other articles published on Apr 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+