Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

14 வயசு சிறுவன் 3 சிக்ஸ் அடிச்சிருக்கான்.. எங்க அந்த ராகுல் திரிப்பாட்டி.. தெறிக்கும் மீம்ஸ்!

ஜெய்ப்பூர்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டு முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். இதனை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள தரமான மீம்ஸை பார்க்கலாம்.

வின்னர் படத்தில் எல்லோரும் ஜாலியாக சிரித்து கொண்டிருக்கும் போது, திடீரென நம்பியார் வடிவேலுவை அரைவார்.. எதுக்குயா அடிக்கிற? என்று கேட்டால், சும்மா ஜாலிக்கு என்பார். நேற்றைய ஆட்டத்தில் அறிமுகமான சூர்யவன்ஷி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது கண்ணீர் சிந்தினார். இதனை ஒப்பிட்டு வடிவேலுவாக தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டியையும், நம்பியராக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, சடாரென ஜாலிக்கு அரைவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

ipl 2025 Memes Vaibhav Suryavanshi Rajasthan Royals

டிக்கிலோனா திரைப்படத்தில் சந்தானத்திடம் லொள்ளு சபா மாறன், "குமாரு.. நீ என்ன இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல்ல" என்பார்.. இதில் வரும் லொள்ளு சபா மாறனை ஹெட்மயராகவும், சந்தானத்தை ராஜஸ்தான் நிர்வாகமும் மாற்றி, "நீங்க இன்னும் என்ன ஃபினிஷர்னு நம்பிட்டு இருக்கீங்களா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஊர தெரிஞ்சிகிட்டேன்.. உலகம் புரிஞ்சிக்கிட்டேன் ரகம்.

ipl 2025 Memes Vaibhav Suryavanshi Rajasthan Royals

இந்தியன் 2 படத்தில் சித்தார்த் தாய் உயிரிழந்த பின், அவரின் குழுவினர் "கோ பேக் இந்தியன்" என்று ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிடுவார்கள். அதில் சித்தார்த் குழுவினரை ராஜஸ்தான் ரசிகர்களாக மாற்றி, கோ பேக் ஹெட்மயர்.. தங்கத்தை தேடும் ஆசையில் பட்லர் என்ற வைரத்தை தொலைத்துவிட்டதாக ரசிகர்கள் உருவாக்கிய மீம் காலம் கடந்து போச்சு மாமே மொமண்ட்.

ipl 2025 Memes Vaibhav Suryavanshi Rajasthan Royals

சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா கண்ணீர்விட்டு அழும்போது, "தம்பி அழுகாதப்பா.. நீ அழுதனா நானும் அழுதுருவேன்பா" என்று ஞானபிரகாசம் சொல்லுவார்.. இதில் வரும் ஜீவாவாக 14 வயதாகும் சூர்யவன்ஷியாக மாற்றி, "தம்பி.. அழுகாதப்பா.. நீ அழுதனா நானும் அழுதுருவேன்பா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் க்யூட் மொமண்ட்.

ipl 2025 Memes Vaibhav Suryavanshi Rajasthan Royals

பரிதாபங்கள் வீடியோவில் வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் மகனை பக்கத்து வீட்டு ஜூனியர் பையனுடன் ஒப்பிட்டு சுதாகர் வெளுத்து கட்டுவார்.. அதில் பக்கத்து வீட்டு பையனாக வைபவ் சூர்யவன்ஷியையும், சுதாகரின் மகனாக ராகுல் திரிப்பாட்டியையும் மாற்றி, பவர் பிளேவில் 2 சிக்ஸ்தான் அடிச்சேன் அங்கிள்.. எதே 2 சிக்ஸா.. என்ன வயசு என்று சுதாகர் கேட்பதாகவும், அதற்கு 14 வயசு அங்கிள் என்று வைபவ் சூர்யவன்ஷி சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உனக்கு இருக்குடா தீபாவளி மொமண்ட்.

ipl 2025 Memes Vaibhav Suryavanshi Rajasthan Royals
Story first published: Sunday, April 20, 2025, 11:24 [IST]
Other articles published on Apr 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+