Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கா இந்திய அணியில் இடமில்லை? சஞ்சு சாம்சன் மிரட்டல்.. லக்னோவை கதி கலங்க வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்

பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 193 ரன்கள் குவித்து இருக்கிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய பட்லர், 11 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல் விளையாடும் ஜெய்ஸ்வால், டி20 யில் எப்படி விளையாடுவார் என்று சொல்லியா தெரிய வேண்டும்.

RR vs LSG IPL 2024 - Rajasthan royals captain Sanju samson brilliant innings put lucknow on back foot

ஜெய்ஸ்வால் 12 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் என ஸ்ட்ரைக் ரேட் 200-ஐ தொட்டது. எனினும் பெரிய ஷாட் ஆட முற்பட்டு பந்தை சரியாக அடிக்காததால் அவர் மனிஷ் பாண்டே உடன் கேட்ச் ஆனார். இதை அடுத்து வாயாடி வீரரான ரியான் பராக் கேப்டன் ஜோடி சேர்ந்தார்.

எப்போதுமே கடும் சர்ச்சைக்கு பெயர் போன ரியான் பராக், இம்முறை மூன்று சிக்சர் ஒரு பவுண்டரி என 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நல்ல ஒரு உந்துதலை கொடுத்தார். இன்னும் கேப்டன் சஞ்சு சாம்சன் தன்னுடைய அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தமது பெயர் பரிசலிக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொண்ட சஞ்சு பதிலடி கொடுக்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் செயல்பட்டார். 52 பந்துகளை எதிர்கொண்ட அவர் 82 ரன்கள் விளாசினார். இதில் ஆறு சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் துருவ் ஜூரல் 20 ரன்கள் சேர்க்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.

லக்னோ அணியில் ரவி பிஸ்னாய் நான்கு ஓவர்கள் வீசி 38 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். குர்னல் பாண்டியா விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும் நான்கு ஓவர்களுக்கு 19 ரன்களை மட்டுமே கொடுத்தார். நான்கு ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் மோசின் கான் நான்கு ஓவர்களில் 45 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

Story first published: Sunday, March 24, 2024, 18:02 [IST]
Other articles published on Mar 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+