Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RR vs LSG: 4 ரன்னில் செஞ்சுரி போச்சே.. நழுவவிட்ட மிட்செல் மார்ஷ்.. மெகா ஸ்கோர் எடுத்த லக்னோ

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 64-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 220 ரன்களைக் குவித்தது. மிட்செல் மார்ஷின் அதிரடி ஆட்டத்தால் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானமே சிக்ஸர் மழையில் நனைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அந்த அணியின் கேப்டன் ஜெய்ஸ்வால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் வழக்கமான கேப்டன் ரியான் பராக் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டம் ஆடினர். குறிப்பாக, பவர்பிளே ஓவர்களில் ராஜஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்த லக்னோ அணி, முதல் 6 ஓவர்களிலேயே 83 ரன்களைக் குவித்து மிரட்டியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்லிஸ் ஜோடி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை ஒரு வழி ஆக்கினர்.

RR vs LSG Mitchell Marsh 96 Runs Highlights vs RR Lucknow Super Giants Post 220 5 in Jaipur

மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு வெறும் 50 பந்துகளில் 109 ரன்களைச் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்லிஸ் 29 பந்துகளில் 60 ரன்கள் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

துரதிர்ஷ்டவசமான ரன்-அவுட்

மறுபுறம் நங்கூரம் பாய்ச்சியது போல நின்ற மிட்செல் மார்ஷ், சதம் அடிப்பார் என்று ஒட்டுமொத்த மைதானமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது. 57 பந்துகளைச் சந்தித்த அவர், 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் எடுத்திருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக கடைசி ஓவரில் ரன்-அவுட் ஆனார். வெறும் 4 ரன்களில் சதத்தை நழுவவிட்ட மார்ஷ், மிகுந்த ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

நடுவரிசையில் களம் புகுந்த கேப்டன் ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு 23 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். நிக்கோலஸ் பூரன் 16 ரன்கள் எடுத்தார். இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

IPL 2026: தோனி விளையாடினால் என்ன, ஓய்வு பெற்றால் என்ன? கவலையில்லை.. சிஎஸ்கே-வை விளாசிய மஞ்ச்ரேக்கர்

IPL 2026: தோனி விளையாடினால் என்ன, ஓய்வு பெற்றால் என்ன? கவலையில்லை.. சிஎஸ்கே-வை விளாசிய மஞ்ச்ரேக்கர்

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் இளம் பந்துவீச்சாளர் யாஷ் ராஜ் புஞ்சா மட்டும் ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். சந்தீப் சர்மா மற்றும் பிரிஜேஷ் சர்மா ஆகியோரின் பந்துவீச்சை லக்னோ பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்தனர்.

Story first published: Tuesday, May 19, 2026, 21:37 [IST]
Other articles published on May 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+